For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

''ஹர்திக் பாண்ட்யா தகுதியற்றவர்”.. பென் ஸ்டோக்ஸுடனான ஒப்பீடு.. பாக். சீனியர் தடாலடி பதில்!

லாகூர்: சிறந்த ஆல்ரவுண்டர் என அழைக்க ஹர்திக் பாண்ட்யா தகுதியற்றவர் என்பது போல பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷித் லதிஃப் கூறியுள்ளார்.

Recommended Video

Hardik Pandya-வை விமர்சனம் செய்த Pakistan அணியின் முன்னாள் வீரர் - Rashid Latif *Cricket

ஆஸ்திரேலிய அணியுடனான டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியால் பின் தங்கியுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகி வரும் இந்த சூழலில் இந்திய அணிக்கு தற்போது இருக்கும் ஒரே நம்பிக்கை ஹர்திக் பாண்ட்யா தான்.

“ஆல்ரவுண்டர் இனி இல்லை” கேப்டன் ரோகித் சர்மா போட்ட விநோத திட்டம்.. 2வது டி20 போட்டியில் சர்ஃபரைஸ்! “ஆல்ரவுண்டர் இனி இல்லை” கேப்டன் ரோகித் சர்மா போட்ட விநோத திட்டம்.. 2வது டி20 போட்டியில் சர்ஃபரைஸ்!

ஹர்திக்கின் கம்பேக்

ஹர்திக்கின் கம்பேக்

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக காயத்தால் அவதிப்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மூலம் அட்டகாச கம்பேக் கொடுத்தார். அப்போது தொடங்கிய அவரின் அதிரடி, ஒவ்வொரு போட்டியிலும் வலுப்பெற்றுக்கொண்டே வருகிறது. குறிப்பாக கடைசியாக நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 30 பந்துகளில் 70 ரன்களை விளாசினார்.

புதிய விவாதம்

புதிய விவாதம்

இதன் மூலம் சர்வதேச அளவில் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக மீண்டும் தனது பெயரை ஹர்திக் பாண்ட்யா பதித்திருக்கிறார். இந்த சூழலில் தான் ஹர்திக் பாண்ட்யா - பென் ஸ்டோக்ஸ் இருவரில் யார் சிறந்த ஆல்ரவுண்டர் என்ற விவாதம் தொடங்கியுள்ளது. இருவருமே ஃபினிஷர் மட்டுமின்றி நல்ல வேகப்பந்துவீச்சாளர்களாக இருப்பதால் இந்த ஒப்பீடு விவாதமாக மாறியுள்ளது.

ரஷித் பேச்சு

ரஷித் பேச்சு

இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷித் லதிஃப் பாண்ட்யாவுக்கு எதிராக கருத்து கூறியுள்ளார். அதில், பாண்ட்யா நல்ல வீரர் தான். ஆனால் அவரின் சிறந்த ஆட்டம் இருதரப்பு தொடர்களில் மட்டுமே உள்ளது. பெரிய தொடர்களில் சொதப்புகிறார். இருதரப்பு தொடர்களில் சிறப்பாக விளையாடுவது சாதரணமான ஒன்று தான். ஆனால் பென் ஸ்டோக்ஸ் அப்படி கிடையாது.

என்ன காரணம்

என்ன காரணம்

பென் ஸ்டோக்ஸ் தன்னை நிரூபித்துகாட்டியவர். உலகக்கோப்பை, ஹெட்டிங்கிலே போன்ற சரித்திர வெற்றிகளை இங்கிலாந்து அணிக்காக வென்றுக்கொடுத்தவர். அப்படிபட்டவரை இருதரப்பு தொடர்களில் மட்டுமே சிறப்பாக ஆடும் ஹர்த்திக்குடன் ஒப்பிடுவது நியாயம் அல்ல. பாண்டியாவை விட பென் ஸ்டோக்ஸ் பல மடங்கு முன்னிலையில் உள்ளார் என ரஷித் லதிஃப் கூறியுள்ளார்.

Story first published: Thursday, September 22, 2022, 20:42 [IST]
Other articles published on Sep 22, 2022
English summary
Rashid latif Opens up about Hardik pandya vs Ben stokes Comparison, thinks Stokes is best
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X