
சிறப்பான பார்ட்னர்ஷிப்
இருவருமே மிகவும் நிதானமாக விளையாடிக்கொண்டு, ஆங்காங்கே பவுண்டரிகளை அடித்து வந்ததால், எதிரணி பவுலர்களால் கணிக்கவே முடியவில்லை. இதனால் முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 124 ரன்களை குவித்தனர். சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 65 பந்துகளில் 50 ரன்களை அடித்து வெளியேறினார். மறுமுணையில் கேப்டன் ஷிகர் தவான் 77 பந்துகளில் 72 ரன்களை குவித்தார். இதனால் இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது.

அபார சாதனை
இந்நிலையில் இந்த ஸ்கோரின் மூலம் தவான் முக்கிய சாதனை படைத்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட் எனப்படும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து உள்ளூர் மற்றும் சர்வதேச ஒரு நாள் போட்டியில் தவான், 296 போட்டிகளில் விளையாடி 11953 ரன்களை அடித்திருந்தார். இன்று அடித்த ரன்களை மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 12,000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்த அபார மைல்கல்லை ஒரு சிலர் மட்டுமே எட்டியுள்ளனர்.

என்ன ஸ்பெஷல்
ஷிகர் தவான் கடந்த 2004ம் ஆண்டே லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அறிமுகமானவர் ஆகும். இதுவரை இவர் 30 சதங்களும் 67 அரை சதங்களையும் அடித்துள்ளார். தவானுடன் வழக்கமாக இணைந்து ஆடும் ரோகித் கூட இன்னும் 12,000 ரன்களை கடக்கவில்லை. அவர் தற்போது வரை 11, 618 ரன்களை அடித்துள்ளார். இவருக்கு முன்பாகவே தவான் சாதனை படைத்துள்ளார்.

முழு பட்டியல்
இந்த பெருமை மிகுந்த பட்டியலில் இங்கிலாந்து வீரர் கிராஹம் கெளவுச் 22,211 ரன்களுடன் முதலிடத்திலும் 22, 059 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் ஜிம்பாப்வே வீரர் கிரேம் ஹிகும் இருக்கின்றனர். இந்திய ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் 21,999 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications