For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோஹ்லி அடித்த சதம்... ட்விட்டரில் புகழ்ந்த பாக்.வீரர்.. வாங்கி கட்டிக்கொண்ட இலங்கை வீரர்

By Aravinthan R

பிர்மிங்காம்: இங்கிலாந்தில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி சதம் அடித்து இந்திய அணியை தாங்கிப் பிடித்தார். இங்கிலாந்து மண்ணில் விராட் கோஹ்லி அதிக ரன்கள் குவிக்கவில்லை என்ற பேச்சையும் ஒரே நாளில் மாற்றினார்.

இங்கிலாந்து அணி முதலில் 287 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி விக்கெட்களை இழந்து தடுமாறியது. விராட் கோஹ்லி மட்டுமே 149 ரன்கள் எடுத்து இந்திய அணியை கரை சேர்த்தார். இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 274 ரன்கள் எடுத்தது.

விராட் கோஹ்லியின் சிறப்பான பேட்டிங் குறித்து, ட்விட்டரில் பலரும் புகழ்ந்து வருகின்றனர். பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர், வெளியிட்ட தனது ட்வீட்டில் கோஹ்லியைப் பாராட்டியுள்ளார்.

நிரூபித்து விட்டார்

"சென்ற முறை இங்கிலாந்து சென்ற போது மோசமாக தோல்வியடைந்தார். ஆனால், இந்த முறை முன்னேற்றம் பெற்று, தான் எப்படிப்பட்ட சிறந்த வீரர் என்பதை அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாடு மூலம் காட்டியுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தில், அனைவரும் எண்ணியது தவறு என நிரூபித்துவிட்டார்" என கூறியுள்ளார்.

உதாரண புருஷன்

மற்றொரு ட்வீட்டில், விக்கெட்கள் இழந்தபோதும் ஸ்ட்ரைக் ரேட் மாறாமல் ரன்கள் எடுத்ததை குறிப்பிட்டு, உலக பேட்ஸ்மேன்களுக்கு ஒரு வரையறையை நிர்ணயித்துள்ளார் என கூறி இருக்கிறார்.

ரஸ்ஸல் அர்னால்டுக்கு கொட்டு

பாகிஸ்தான் வீரராக இருந்தாலும், இந்தியாவின் விராட் கோஹ்லியை மனம் திறந்து பாராட்டிய அக்தரின் கருத்தை பலரும் ஏற்று ட்விட்டரில் கருத்துக்கள் கூறி வருகின்றனர். இப்படி நல்லவிதமாக சென்று கொண்டிருந்த ட்விட்டரில், தேவையில்லாமல் ஒரு ட்வீட் போட்டு வாங்கி கட்டிக் கொண்டு இருக்கிறார், இலங்கையின் ரஸ்ஸல் அர்னால்டு.

தெரியாதது மாதிரியே கேள்வி

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி மற்றும் கோஹ்லி சதம் பற்றி எதுவும் தெரியாதவர் போல, "இங்கே என்ன நடக்கிறது? கிரிக்கெட் தொடர்பான ட்வீட்கள் அதிகம் வருகிறதே..." என கேட்டுள்ளார் ரஸ்ஸல் அர்னால்டு.

தேவையா இது

அடுத்து, "ஓ! இங்கே போட்டிகள் எதுவும் நடைபெறுகிறதா?" என கேட்டிருக்கிறார். இதையடுத்து இந்திய ரசிகர்கள் பலரும், அவரை திட்டியும், கேலி செய்தும் ட்வீட் போட்டு வருகிறார்கள். இவருக்கு பிடிக்கவில்லை என்றால் பேசாமல் இருந்திருக்கலாமே... எதற்காக இப்படி ட்வீட் போட்டு அவமானப்பட வேண்டும்?








Story first published: Friday, August 3, 2018, 16:32 [IST]
Other articles published on Aug 3, 2018
English summary
Shoaib Akthar praises Kohli for his ton at england in twitter.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X