For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"கன்" மாதிரி தன் டீமை வெற்றி பெற வைத்த டிராவிட் மகன்.. "பெஸ்ட் பேட்ஸ்மேன்" ஆக தேர்வு!

பெங்களூரு: ராகுல் டிராவிடின் மகன் சமீத் டிராவிட் தனது சிறப்பான ஆட்டத்தால் 12 வயதுக்குட்பட்டோருக்கான கோபாலன் கிரிக்கெட் தொடரில், தனது மால்யா அதிதி சர்வதேச பள்ளி அணிக்கு பட்டம் வாங்கிக் கொடுத்து அசத்தியுள்ளார். இந்தத் தொடரின் சிறந்த பேட்ஸ்மேன் விருதும் அவருக்கே கிடைத்தது.

டிராவிடன் மகனான சமீத், பெங்களூர் செயின்ட் ஜான்ஸ், மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில், அபாரமாக ஆடி 77 ரன்களைக் குவித்தார். இப்போட்டியில், 23 ரன்கள் வி்த்தியாசத்தில் ஹெட் ஸ்டார்ட் கல்விக் கழக அணியை மால்யா அதிதி பள்ளி அணி வீழ்த்தி பட்டத்தை வென்றது.

Son rise: Rahul Dravid's son Samit takes team to title victory, wins 'Best Batsman' award

இந்தத் தொடரில் 3 அரை சதம் போட்டு அசத்தினார் சமீத் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவருக்கே சிறந்த பேட்ஸ்மேன் விருதும் கிடைத்தது.

சமீத்துக்கு 9 வயதுதான் ஆகிறது. வலது கை பேட்ஸ்மேன் ஆன இவர் இந்தத் தொடரில் 77, 93, 77 என அரை சதங்களைக் குவித்துக் கலக்கினார். இந்தப் போட்டிகள் அனைத்திலும் இவரது அணியே வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

குட்டிப் பையன் ஆன சமீத் கண்ணாடி போட்டபடிதான் ஆடுகிறார். ஆனாலும் எந்தவிதமான அசவுகரியமும் இல்லாமல் அவர் அடித்து நொறுக்கியது டிராவிடை நினைவுபடுத்துவது போல இருந்தது.

Story first published: Monday, September 7, 2015, 12:25 [IST]
Other articles published on Sep 7, 2015
English summary
Samit Dravid struck his 3rd half century to help Mallya Aditi International School win the Under-12 title at the Gopalan Cricket Challenge tournament here on Saturday (September 5). Samit, the son of former India captain Rahul Dravid, scored 77 as his team defeated Head Start Educational Academy by 23 runs in the final at the St. John's Medical College grounds.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X