For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சாய்னா நேவாலை பார்த்து கற்று கொள்ளுங்கள்: இளம் வீரர்களுக்கு சச்சின் 'அட்வைஸ்'

By
Sachin
நாசிக்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற சாய்னா நேவால், இந்தியாவில் வளர்ந்து வரும் இளம் விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த மாதிரியாக உள்ளார். அவரிடம் இருந்து இளம் வீரர்கள் கற்று கொள்ள வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெரிவித்துள்ளார்.

நாசிக்கில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட சச்சின், கலந்து உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர், இளம் விளையாட்டு வீரர்களுக்கு சாய்னா நேவால் ஒரு சிறந்த மாதிரி என்று தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலை பார்த்து, வளரும் இளம் விளையாட்டு வீரர்கள் கற்று கொள்ள வேண்டும். சாய்னா தனது கடின உழைப்பின் மூலம் பல வெற்றிகளை பெற்று, இன்று உயர்ந்த இடத்தில் உள்ளார்.

கிரிக்கெட்டை தவிர எனக்கு டென்னிஸ் மீதும் அதிக ஆர்வம் இருந்தது. ஆனால் எனது மூத்த சகோதரன் அளித்த அறிவுரையை ஏற்று கிரிக்கெட் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தினேன். எனக்கு 7 அல்லது 8 வயது இருக்கும் போது நாசிக்கில் உள்ள புனித தலங்களுக்கு வந்துள்ளேன். அதன்பிறகு கடந்த 1983ம் ஆண்டு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக நாசிக் வந்துள்ளேன். தற்போது சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு நாசிக் நகருக்கு மீண்டும் வந்துள்ளேன்.

நான் ஆடுகளத்தில் இருக்கும் போது மனஉறுதி மற்றும் பொறுமையுடன் செயல்படுவது வழக்கம். இதனால் இதுவரை பந்துவீச்சாளர்களிடமோ, அம்பயர்களிடமோ நான் வாக்குவாதம் செய்தது இல்லை என்றார்.

Story first published: Friday, September 7, 2012, 12:37 [IST]
Other articles published on Sep 7, 2012
English summary
Sachin advised budding sports persons to put in hours of practice in order to achieve success at the international level just like Olympic bronze medallist Saina Nehwal.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X