For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பந்தை சேதப்படுத்திய விவகாரம்.. கேப்டன், துணை கேப்டன் பதவியிலிருந்து ஸ்மித், வார்னர் நீக்கம்!

கிரிக்கெட் பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், கேமரூன் ஆகியோர் மீது புகார் வைக்கப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar

Recommended Video

ஸ்மித், வார்னருக்கு வாழ்நாள் தடையா-வீடியோ

கேப்டவுன்: கிரிக்கெட் பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், கேமரூன் ஆகியோர் மீது புகார் வைக்கப்பட்டு இருக்கிறது.

இவர்கள் தங்கள் மீது வைக்கப்பட்டு இருக்கும் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். கேப்டவுனில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது கேப்டன், துணை கேப்டன் பதவியிலிருந்து ஸ்மித், வார்னர் நீக்கப்பட்டு இருக்கிறார்கள். இது அந்த அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

என்ன

ஸ்மித், கேமரூன் ஆகிய இருவரும் உப்புத்தாள் போன்ற சாதனம் கொண்டு பந்தை தேய்த்து இருக்கிறார்கள். இதை பாக்கெட்டில் மறைமுகமாக வைத்து கொண்டு வந்துள்ளனர். பந்தை மாற்றும் போது, உப்புத்தாளை வைத்து தேய்த்து இருக்கிறார்கள். பந்து நன்றாக சுழல வேண்டும் என்று இப்படி செய்தார்கள்.

பிரச்சனை

பிரச்சனை

இது வீடியோவாக வெளியானது. இதனால் ஆஸ்திரேலிய விளையாட்டு அமைச்சகம் இருவருக்கும் எதிராக கருத்து தெரிவித்தது. அந்நாட்டு பிரதமர் கூட ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

ஒப்புக்கொண்டனர்

இந்த குற்றத்தை ஸ்மித், கேமரூன் ஆகிய இருவரும் ஒப்புக்கொண்டார்கள். நேற்று போட்டிக்கு பின்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இவர்கள் தங்கள் செய்த தவறை ஒப்புக்கொண்டார்கள். பந்து சரியாக சுழல வேண்டும் என்பதற்காக இப்படி செய்தோம் என்றார்கள்.

பதவியில் இருந்து நீக்கம்

இந்த நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி கேப்டன் பதவியில் ஸ்மித் நீக்கப்பட்டு இருக்கிறார். ஆஸி. அணியின் துணை கேப்டன் வார்னரும் நீக்கப்பட்டு இருக்கிறார். ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டனாக டிம் பெயின் செயல்படுவார். ஆனால் ஸ்மித், வார்னர் அணியில் விளையாடுவார்கள்.

ஐபிஎல் போட்டி

தற்போது ஸ்மித் ஐபிஎல் போட்டியில் கேப்டன் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டு இருக்கிறார். இவர் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருக்கிறார். இவர் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஐசிசி விசாரணைக்கு பின்பே என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரியும்.

Story first published: Sunday, March 25, 2018, 15:01 [IST]
Other articles published on Mar 25, 2018
English summary
Steve Smith, Warner took down from Captain, Vice Captain post after tampering of ball. Smith admitted that he tampered ball for a best swing in the press meet.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X