For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Virat Kohli: என்னத்த சொல்றது...? ஒன்னுமே புரியல.. ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இழந்த கோலி

ஹைதராபாத்:சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிடைத்த படுதோல்விக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை என்று பெங்களூர் அணி கேப்டன் கோலி புலம்பி தள்ளியுள்ளார்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2019ன் 11வது ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் அணி ஆர்சிபி அணியை பிழிந்து எடுத்துவிட்டது. 231 ரன்களை குவித்த ஹைதராபாத், அதே நேரத்தில் பெங்களூர் அணியை 113 ரன்களில் சுருட்டி உட்கார வைத்துவிட்டது.

பெங்களூர் அணியின் இந்த படுதோல்வி, அந்த அணியின் ரசிகர்களை உலுக்கி எடுத்துவிட்டது. அந்த தோல்வியை அவர்கள் ஜீரணிக்க முடியாமல் புலம்பி வருகின்றனர்.

MS Dhoni: இதை பண்ணினோம்... ராஜஸ்தானை அடிச்சு தூக்கினோம்.. தோனி சொன்ன வெற்றி ரகசியம் MS Dhoni: இதை பண்ணினோம்... ராஜஸ்தானை அடிச்சு தூக்கினோம்.. தோனி சொன்ன வெற்றி ரகசியம்

புலம்பிய கோலி

புலம்பிய கோலி

இந் நிலையில் அணியின் தோல்வி குறித்து கேப்டன் கோலி புலம்பி தள்ளியிருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது:இந்த போட்டி எங்களுக்கு ஒரு மிக பெரிய தோல்வி.

சன்ரைசர்ஸ் தரமானது

சன்ரைசர்ஸ் தரமானது

என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அனைத்து பகுதிகளிலும் சன் ரைசர்ஸ் என்ற தரமான அணி வீழ்த்தி விட்டது. முன்னாள் சாம்பியன்கள் என்பதை அவர்கள் நிரூபித்திருக்கின்றனர்.

கணித்து விளையாடினர்

கணித்து விளையாடினர்

பேர்ஸ்டோ, வார்னர் பேட்டிங் அபாரம். அவர்கள் ரன்களை குவிக்க தொடங்கிய போது ஏதேனும் நாங்கள் செய்திருக்கலாம். ஆடுகளத்தை அவர்கள் இருவரும் சரியாக கணித்து விளையாடி இருக்கின்றனர்.

அற்புத ஆட்டம்

அற்புத ஆட்டம்

முதல் 16, 17 ஓவர்கள் வரை அவர்களின் ஆட்டத்தை பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. அவ்வளவு அற்புதமாக அவர்கள் இந்த போட்டியில் தீவிரம் காட்டினர்.

யோசித்தும் பலனில்லை

யோசித்தும் பலனில்லை

வெற்றி இலக்கை சேஸ் செய்யும் போது, தொடக்க ஓவர்களில் ரன்களை குவித்து விடலாம் என்று யோசித்து வைத்திருந்தோம். ஆனால்... எதிர்பாராத வகையில் நான் 3 ரன்களில் அவுட்டாகிவிட்டேன்.

மாறும் என நம்பிக்கை

மாறும் என நம்பிக்கை

இன்னும் 11 ஆட்டங்கள் பாக்கி இருக்கிறது. விரைவில் நிலைமைகள் மாறும் என்று நம்புகிறோம். வெற்றிக்கான வியூகங்களை வகுக்க வேண்டும். அதற்கான வழிகளை கண்டுபிடித்து, விரைவில் வரக்கூடிய போட்டிகளை வெற்றி பெறும் வகையில் அணியை கொண்டு செல்வோம் என்று கூறினார்.

Story first published: Monday, April 1, 2019, 11:02 [IST]
Other articles published on Apr 1, 2019
English summary
Sun risers showed that they are a champion side and beat us says dejected Kohli said after the match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X