For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஃபேஷன் ஷோக்கு போயிடலாமா??.. இந்திய அணியில் சர்ஃபராஸ் கானின் புறகணிப்பு.. கவாஸ்கர் கடும் விளாசல்!

மும்பை: இந்திய அணியில் சர்ஃபராஸ் கான் சேர்க்கப்படாததற்கு தேர்வுக்குழு கொடுத்துள்ள விளக்கங்களை கேட்டு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விளாசியுள்ளார்.

நியூசிலாந்து அணியுடனான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதி வரும் இந்திய அணி, அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளது.

அதற்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த தொடரில் இந்தியா வெற்றி பெற்றே தீர வேண்டும்.

“நம்ப வச்சு ஏமாத்திட்டாங்க”.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி.. சர்ஃபராஸ் கான் மனவேதனை! “நம்ப வச்சு ஏமாத்திட்டாங்க”.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி.. சர்ஃபராஸ் கான் மனவேதனை!

சர்ஃபராஸ் கான் ஃபார்ம்

சர்ஃபராஸ் கான் ஃபார்ம்

இப்படிபட்ட மிக முக்கிய டெஸ்ட் தொடருக்கான அணியில் நல்ல ஃபார்மில் இருக்கக்கூடிய சர்ஃபராஸ் கான் ஏன் சேர்க்கப்படவில்லை என்பது தான் சர்ச்சையாக வெடித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அடித்தளமாக உள்ள ரஞ்சிக்கோப்பையில் கடந்த 3 சீசன்களாக அவரை எந்தவொரு பவுலராலும் எளிதாக கட்டுப்படுத்த முடியவில்லை. கடந்த 3 சீசனங்களில் 928 ரன்கள், 982 ரன்கள், 801 ரன்கள் என ரன் வேட்டை நடத்தி இருக்கிறார். அவரின் சராசரி 100-ஐ தாண்டி சென்றுவிட்டது.

ஒதுக்கியது ஏன்?

ஒதுக்கியது ஏன்?

நினைத்துக்கூட பார்க்க முடியாத ஃபார்மில் உள்ள சஃப்ராஸ் கான் எதற்காக புறகணிக்கப்பட்டார் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது. இதற்கு அவர் அதிக உடல் எடையுடன் இருப்பதாகவும், ஃபிட்டாக இல்லை என்றும் காரணம் கூறப்படுகிறது. சர்வதேச போட்டிகளில் சர்ஃப்ராஸ் சோர்வடைந்துவிடுவார் எனவும் தேர்வுக்குழு தரப்பில் இருந்து தகவல் வெளியானது.

கவாஸ்கர் அதிருப்தி

கவாஸ்கர் அதிருப்தி

இந்நிலையில் இதற்கு கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார். அதில், ஸ்லிம்மாகவும், ஒல்லியாகவும் இருக்கும் வீரர்கள் மட்டும் வேண்டுமென்றால் ஃபேஷன் ஷோக்களுக்கு செல்லும், அங்குள்ள மாடல்களின் கைகளில் பேட்டையும் பந்தையும் கொடுத்துவிடுங்கள். அது இல்லை கிரிக்கெட். பல்வேறு உடல் அமைப்புகளுடனும் தான் வீரர்கள் வருவார்கள். அவர்களின் திறமையை பார்க்க வேண்டுமே தவிர, உடலை மட்டும் பார்க்கக்கூடாது.

ஓடவில்லையே?

ஓடவில்லையே?

சர்ஃப்ராஸ் கான் ஒருமுறை சதமடித்துவிட்டால், பின்னர் ஃபீல்டிங்கிற்கு நிற்காமல் போவதில்லையே, மீண்டும் அதே வேகத்தில் அடுத்த இன்னிங்ஸிற்காக ஃபீல்டிங்கில் நிற்கிறார். வெறும் யோ யோ தேர்வு மற்றும் ஃபிட்னஸை வைத்து மட்டுமே வீரரின் செயல்பாட்டை முடிவு செய்துவிடாதீர்கள் என சுனில் கவாஸ்கர் கோரியுள்ளார்.

மனவேதனை

மனவேதனை

இந்நிலையில் இதுகுறித்து அவர் மனவேதனை அடைந்துள்ளார். அதில் இந்திய அணி அறிவிப்பின் போது, அதில் என் பெயர் இடம்பெறாததை பார்த்து நான் ஏமாற்றமடைந்தேன்.

நான் தேர்வு செய்யப்படுவேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது நடைபெறவில்லை. கவுகாத்தியிலிருந்து டெல்லிக்கு பயணிக்கும் போது ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்ன நடக்கிறது என்பதை நினைத்து தனிமையாக உணர்ந்து அழுதேன்"

உறுதி கொடுத்தனர்

உறுதி கொடுத்தனர்

ரஞ்சிக் கோப்பை இறுதிப்போட்டியில் சதமடித்த பின் நான் தேர்வு குழுவினரை சந்தித்தேன். அப்போது வங்கதேச தொடரில் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அதற்காக தயாராக இருக்குமாறும் அவர்கள் என்னிடம் உறுதியளித்தனர். சமீபத்தில் நான் சேட்டன் சர்மாவையும் சந்தித்தேன். அவரும் விரைவில் வாய்ப்பு வரும் எனக்கூறியிருந்தார். ஆனால் எதுவுமே நடக்கவில்லை என சர்ஃபராஸ் கான் வேதனையுடன் பேசியுள்ளார்.

Story first published: Friday, January 20, 2023, 12:15 [IST]
Other articles published on Jan 20, 2023
English summary
Former Indian cricketer Sunil gavaskar slams selection committee after exclude the sarfaraz khan in Indian test squad, here is the full speech
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X