For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தல தோனி ரசிகர்களுக்கு விசில் போடு..!! இது போல எங்கியாச்சும் நடந்திருந்தா சொல்லுங்க

சென்னை:சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி முடிந்த பிறகு, ஸ்டேயத்தில் இருந்த குப்பைகளை தோனி ஆர்மியினர் சுத்தம் செய்த சம்பவம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 6-ம் தேதி நடைபெற்றது.

இந்தப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை சென்னை அணி தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது. இறுதி ஓவர்களில் தோனி அடித்த ரன்கள், அந்த ஆட்டத்துக்கு பெரிதும் உதவியது.

கோலி மன உளைச்சலில் இருக்கிறார்.. ஐபிஎல் தொடரில் இருந்து அவருக்கு ஓய்வு கொடுங்க! கோலி மன உளைச்சலில் இருக்கிறார்.. ஐபிஎல் தொடரில் இருந்து அவருக்கு ஓய்வு கொடுங்க!

சென்னைக்கு வெற்றி

சென்னைக்கு வெற்றி

இதையடுத்து விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 138 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரசிகர்கள் செயல்

ரசிகர்கள் செயல்

வழக்கமாக போட்டி முடிந்தவுடன் ரசிகர்கள் அவர்கள் பாட்டுக்கு சென்று விடுவது வழக்கம். ஆனால்... மற்ற அணி ரசிகர்களை விட தல தோனியின் சென்னை ரசிகர்கள் செய்த செயல் இன்று உலகளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை உற்று பார்க்க வைத்துள்ளது.

குப்பைகள் அகற்றம்

குப்பைகள் அகற்றம்

போட்டி முடிந்த பிறகு.... மைதானம் முழுவதும் எங்கு பார்த்தாலும் ஒரே குப்பைகளாக இருந்திருக்கின்றன. அப்படியே இருந்துவிட்டு போகட்டும்... நமக்கென்ன என்று நினைக்காமல் குப்பைகள் அனைத்தையும் அவர்கள் சுத்தம் செய்து வந்துள்ளனர்.

10 கிலோ குப்பைகள்

போட்டி முடிந்த பிறகே மைதானத்தில் கிடந்த குப்பைகளை சென்னை அணியின் விசில் போடு ஆர்மி ரசிகர்கள் சுத்தம் செய்தனர். அவர்கள் மைதானத்தில் கிடந்த 10 கிலோவுக்கும் அதிகமான குப்பைகளைச் சுத்தம் செய்தனர்.

வைரல் புகைப்படங்கள்

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Story first published: Monday, April 8, 2019, 13:48 [IST]
Other articles published on Apr 8, 2019
English summary
Suresh Raina lauds Chennai Super Kings fans for cleaning stands at Chepauk after Kings XI Punjab clash.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X