For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி போட்ட விதை.. இந்திய வீரர்கள் நேர்த்தியாக சிக்ஸர் அடிப்பது எப்படி?.. பேட்டில் மறைந்துள்ள ரகசியம்

சிட்னி: தோனி அன்று செய்து வைத்த திட்டம் தான் இன்று வரை இந்திய வீரர்களுக்கு டி20 கிரிக்கெட்டில் உதவி வருவது தெரியவந்துள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா தொடக்கத்தில் இருந்தே கெத்து காட்டி வருகிறது.

முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்திலும், நெதர்லாந்து அணியை 56 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி அசத்தியுள்ளது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் வகிக்கிறது.

தோனி சொன்னது அப்படியே நடக்குதே.. டி20 உலகக்கோப்பை இந்த முறை இந்தியாவுக்கு தானா??.. 2 ஆதாரங்கள் இதோ!! தோனி சொன்னது அப்படியே நடக்குதே.. டி20 உலகக்கோப்பை இந்த முறை இந்தியாவுக்கு தானா??.. 2 ஆதாரங்கள் இதோ!!

 இந்தியாவின் வெற்றிகள்

இந்தியாவின் வெற்றிகள்

இந்திய அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தது விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரின் அதிரடி தான். ஆக்ரோஷமான முறையில் தான் பேட்டிங் இருக்கும் என ரோகித் சர்மா கூறியதை போலவே இந்தியாவின் பேட்டிங் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் இந்த சிறப்பான பேட்டிங்கிற்கு தோனியும் ஒரு முக்கிய காரணம்.

 தோனியின் ப்ளான்

தோனியின் ப்ளான்

இந்திய அணியில் விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகியோர் முன்பை விட சிக்ஸர் அடிப்பதில் சிறந்து விளங்குகின்றனர். இதற்கு காரணம் அவர்கள் பயன்படுத்தும் பேட். அதாவது கடந்த 2019ம் ஆண்டு தோனி ஸ்பெஷலாக தயாரித்துக்கொண்ட 'Curved Bat' - ஐ தான் இன்றைய வீரர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த பேட்டிங் சிறப்பம்சமே அதன் வடிவம் தான்.

காரணம் என்ன

காரணம் என்ன

தோனி பயன்படுத்திய அந்த பேட்டில் கடைசி நுனி பகுதியில் நன்கு வளைந்திருக்கும். அப்படி வளைந்திருக்கும் போது பந்தை திருப்பி சிக்ஸருக்கு அடிப்பது மிகவும் சுலபமான ஒன்று. அதாவது நேராக இருக்கும் ஒரு பேட்டை வைத்து சிக்ஸர் அடிப்பதை விட, வளைந்திருக்கும் பேட்டில் சிக்ஸர் அடிப்பது மிகவும் வேகமாகவும் செல்லும், அதே போல நாம் நினைத்த திசைக்கும் சுலபமாக திருப்ப முடியும்.

கோலி சிக்ஸர்

கோலி சிக்ஸர்

இதில் வெற்றி கண்ட தோனி, பாண்ட்யா, கே.எல்.ராகுல், கோலி உள்ளிட்டோருக்கும் இதனை பயன்படுத்தி பார்க்குமாறு அறிவுரை கூறினார். அதன்படியே அவர்களும் செய்து வருகின்றனர். பாகிஸ்தான் போட்டியில் விராட் கோலி ஷார்ட்டாக வந்த பந்தை சிக்ஸருக்கு அடித்ததும் இதுபோன்ற பேட்டில் தான்.

Story first published: Saturday, October 29, 2022, 10:37 [IST]
Other articles published on Oct 29, 2022
English summary
Dhoni's Idea helps team India batsmens to hit the Accurate Sixes in the t20 world cup 2022, here is the reason why?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X