For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

WATCH: வாவ்... ஸ்டோக்சை பதம் பார்த்த ஸ்டார்க்கின் யார்க்கர்.. உலக கோப்பை சீசனின் சிறந்த பவுலிங்

Recommended Video

இந்த உலக கோப்பையின் சிறந்த யார்க்கர் இதுதான்

லார்ட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிராக ஆஸி.பவுலர் ஸ்டார்க் வீசிய யார்க்கரே... இந்த உலக கோப்பையின் சிறந்த பவுலிங் என்று வர்ணிக்கப்படுகிறது.

2015 உலக கோப்பையில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்றவர் ஆஸ்திரேலிய நட்சத்திர பவுலர் மிட்செல் ஸ்டார்க், இந்த உலக கோப்பையிலும் அவரது பவுலிங் தொடருகிறது. ஆஸி.யின் வெற்றிகளில் அவரது பங்களிப்பு அபரிமிதமாக இருக்கிறது.

நடப்பு உலக கோப்பையில் இதுவரை 7 போட்டிகளில் ஆடிய ஸ்டார்க், 19 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலராக திகழ்கிறார். நேற்றைய போட்டியில் இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா அரையிறுதிக்குள் நுழைந்திருக்கிறது.

நீங்கள் அதிகம் டிரெய்னிங் எடுக்க வேண்டும்.. கூடுதல் நேரம் வலைப்பயிற்சி செய்த முக்கிய வீரர்.. ஏன்? நீங்கள் அதிகம் டிரெய்னிங் எடுக்க வேண்டும்.. கூடுதல் நேரம் வலைப்பயிற்சி செய்த முக்கிய வீரர்.. ஏன்?

தோல்விக்கு காரணம்

தோல்விக்கு காரணம்

இந்த போட்டியில் 4 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். இங்கிலாந்தின் தோல்விக்கு இதுவே முக்கிய காரணம். ஏன் என்றால், முதலில் ஆடிய ஆஸ்திரேலியா, பின்ச்சின் சதம், வார்னரின் அரை சதம் மற்றும் ஸ்மித், கேரியின் அதிரடியான பேட்டிங் என 285 ரன்கள் குவித்தது. ஒரு கட்டத்தில் 330 ரன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்தின் பவுலிங் அதை மட்டுப்படுத்தியது.

ஸ்டோக்ஸ் அபாரம்

ஸ்டோக்ஸ் அபாரம்

286 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்தில், தொடக்க வீரர் வின்ஸ் 2வது பந்திலேயே வீழ்ந்தார். அதன்பின்னர் 2 முக்கியமான வீரர்களான ஜோ ரூட் மற்றும் இயன் மார்கன் ஆகிய இருவரையும் ஸ்டார்க் வீழ்த்தினார். ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிய, மறுமுனையில் அபாரமாக ஆடிக் கொண்டிருந்தார் பென் ஸ்டோக்ஸ்.

கடைசி பந்து

கடைசி பந்து

அப்போது ஸ்டார்க்கிற்கு மீண்டும் பந்துவீச வாய்ப்பு தந்தார் பின்ச். அதுதான் ஆஸி.யின் வெற்றிக்கு காரணமாக இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. 37வது ஓவரை வீசிய ஸ்டார்க், அந்த ஓவரின் கடைசி பந்தில் ஸ்டோக்ஸை வீழ்த்தினார்.

துல்லிய யார்க்கர்

துல்லிய யார்க்கர்

ஸ்டார்க் வீசிய துல்லியமான யார்க்கர்... கிளீன் போல்டானார் ஸ்டோக்ஸ். அதை எதிர் பார்க்காமல் கையில் இருந்த மட்டையையும் தவறவிட்டு, ஒரு கணம் ஆடிப்போய் களத்தில் நின்றார் ஸ்டோக்ஸ். ஏன் என்றால் அப்படி வந்தது அந்த பந்து. மிக, மிக துல்லியமாக வீசப்பட்டது அந்த இன் ஸ்விங் யார்க்கர்.

பெஸ்ட் யார்க்கர்

ஸ்டோக்ஸ் மட்டுமல்லாமல் உலகத் தரம் வாய்ந்த எந்த பேட்ஸ்மேனாக இருந்தாலுமே ஆட முடியாது என்று சொல்லலாம். ஸ்டோக்ஸின் விக்கெட்டுதான் ஆட்டத்தின் திருப்புமுனை. அந்த துல்லியமான யார்க்கர் இந்த உலக கோப்பையின் மிகச்சிறந்த யார்க்கர் என்றால் ரொம்ப பொருத்தமாக இருக்கும்.

Story first published: Wednesday, June 26, 2019, 15:08 [IST]
Other articles published on Jun 26, 2019
English summary
This world cups best Yorker bowled by starc against England.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X