For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி செம நேச்சுரல்.. அதான் அடிச்சுக் கலக்குறார்.. வில்லியம்சன் புகழ் மழை!

டெல்லி: நேச்சுரலாக விளையாடும் எல்லோருக்குமே திறமைகள் கூடுதலாகவே இருக்கும். சாதனைகளும் தேடி வரும். அந்த வகையில் விராட் கோலியின் சாதனைகளுக்கு அவர் நேச்சுரலாக விளையாடுவதே முக்கியக் காரணம் என்று நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியுள்ளார்.

விராட் கோலி குறித்து விலாவாரியாக பேசியுள்ளார் வில்லியம்சன். அவரது சாதனைகள் குறித்தும் அவர் பேசியுள்ளார். விராட் கோலியின் திறமைக்கு அவரது நேச்சுரலான ஆட்டம்தான் காரணம் என்று கூறியுள்ளார் வில்லியம்சன்.

இதுதொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவியின் கிரிக்கெட் கனெக்டட் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் தெரிவித்துள்ள சில கருத்துக்கள்:

இதனால்தாங்க தோனி சூப்பர் ஸ்பெஷல்.. ரகசியத்தை போட்டுடைத்த டைபுஇதனால்தாங்க தோனி சூப்பர் ஸ்பெஷல்.. ரகசியத்தை போட்டுடைத்த டைபு

கோலியின் திறமை

கோலியின் திறமை

மிகவும் இளம் வயதிலேயே நான் விராட் கோலியை சந்தித்தேன். 2008ம் ஆண்டு அவரது ஒரு நாள் அறிமுகத்தின்போது கோலியை நான் சந்தித்தேன். அப்போதே தெரிந்தது அவரது ஆட்டம் நேச்சுரலானது என்று. மிக வேகமாக சர்வதேச அரங்கில் அவர் காலூன்றி விட்டார். அதற்குக் காரணமும் அவரது இயல்பான ஆட்டத்திறன்தான் என்று தெரிவித்துள்ளார் வில்லியம்சன்.

மிகச் சிறந்த சாதனையாளர்

மிகச் சிறந்த சாதனையாளர்

இந்த நிமிடத்தில் சர்வதேச வீர்ரகளில் விராட் கோலி முக்கிய இடத்தில் இருக்கிறார். கிரிக்கெட்டை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார். மிகச் சிறந்த தரத்தை அவர் நிர்ணயித்துள்ளார். அனைத்து சாதனைகளையும் அவர் முறியடித்து வருகிறார். புதிய சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறார். அவரது திறமைக்கு சாதனைகள் மேலும் மேலும் வரும் என்று கூறியுள்ளார்.

விரைந்து முடிவெடுக்கிறார்

விரைந்து முடிவெடுக்கிறார்

சிறந்த முடிவுகளை ஒரு கேப்டனாக அவர் எடுக்கிறார். முடிவுகளை எடுப்பதில் விரைவாக இருக்கிறார். இதுவும் அவரது திறமைகளில் ஒன்று. எல்லா கேப்டன்களுக்கும் அது வராது. கோலிக்கு எதிராக விளையாட வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம். இதுபோன்ற திறமைகளுக்கு எதிராக விளையாடுவது எப்போதுமே சவாலானது என்றார் வில்லியம்சன்.

எனக்கு அதிர்ஷ்டம்தான்

எனக்கு அதிர்ஷ்டம்தான்

மிகச் சிறந்த வரம் வாய்ந்த வீரர் கோலி என்பதில் சந்தேகம் இல்லை. இதுபோன்ற திறமையாளர்கள் எதிராளிகளாக இருக்கும்போதுதான் நமது தேடலும் அதிகரிக்கும். திறமையும் அதிகரிக்கும். இன்னும் நம்மை முன்னேற்ற வேண்டும் என்ற உத்வேகமும் கிடைக்கும். நாளுக்கு நாள் நம்மையும் மெருகேற்ற வாய்ப்பாக அமையும். மிகச் சிறந்த வீரர் கோலி என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை என்று வில்லியம்சன் கூறினார்.

Story first published: Tuesday, June 9, 2020, 13:15 [IST]
Other articles published on Jun 9, 2020
English summary
Natural ability married to insatiable hunger for improvement -Kane Williamson's assessment on Virat Kohli
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X