For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாருமே செய்யாத சாதனை.. 3 ஐசிசி விருதுகள்.. 2 பெருமைகள்.. நீளும் கோலியின் சாதனை பட்டியல்

துபாய் : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி 2018க்கான மூன்று முக்கிய ஐசிசி விருதுகளை வென்று ஹாட்ரிக் அடித்துள்ளார்.

ஒரே ஆண்டில் மூன்று சிறந்த வீரர் விருதுகளை வென்றுள்ள கோலி, மேலும் ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதுவரை எந்த வீரரும் செய்யாத சாதனையை செய்துள்ளார்.

மூன்று விருதுகள்

மூன்று விருதுகள்

ஐசிசி சிறந்த வீரர் 2018 விருது, ஐசிசி சிறந்த டெஸ்ட் வீரர் விருது 2018 மற்றும் ஐசிசி சிறந்த ஒருநாள் போட்டி வீரர் விருது 2018 என மூன்று சிறந்த வீரர் விருதுகளை அள்ளினார் கோலி.

அதிக ரன் குவித்த வீரர்

அதிக ரன் குவித்த வீரர்

கடந்த மூன்று ஆண்டுகளாகவே கோலி சர்வதேச அரங்கில் அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமை பெற்று வந்தார். 2018இல் கோலி 11 சதம், 9 அரைசதம் உட்பட 2735 ரன்கள் அடித்தார். இதன் சராசரி 68.37 என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டீவ் ஸ்மித் இல்லை

ஸ்டீவ் ஸ்மித் இல்லை

இதையடுத்து கோலி சிறந்த வீரர் விருதுக்கு தேர்வானார். கடந்த ஆண்டுகளில் ஸ்டீவ் ஸ்மித், கோலிக்கு போட்டியாக இருந்த நிலையில் அவர் தடை பெற்றதால் கோலிக்கு போட்டியாக எந்த வீரரும் ரன் குவிக்கவில்லை.

சிறந்த ஒருநாள் போட்டி வீரர்

சிறந்த ஒருநாள் போட்டி வீரர்

இது மட்டுமில்லாமல், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிறந்த ஒருநாள் போட்டி வீரர் விருதையும் வென்று அசத்தியுள்ளார் கோலி. கடந்த ஆண்டு 1202 ரன்கள் அடித்து, சராசரி 133.55 வைத்திருந்தார் கோலி. இதை எந்த வீரராலும் நெருங்க முடியவில்லை.

சிறந்த டெஸ்ட் வீரர்

சிறந்த டெஸ்ட் வீரர்

2018இல் டெஸ்ட் போட்டிகளில் 1322 ரன்கள் அடித்து, சராசரி 55.08 வைத்திருந்தார் கோலி. டெஸ்ட் போட்டிகளிலும் கோலி தான் அதிக ரன்கள் அடித்த வீரர். இதன் மூலம், சிறந்த டெஸ்ட் வீரர் விருதையும் கோலி வென்றார்.

டெஸ்டில் அதிக ரன்கள்

டெஸ்டில் அதிக ரன்கள்

தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்களில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெயர் பெற்றார் கோலி. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் தவிர்த்து, இந்திய பேட்டிங்கை டெஸ்டில் தாங்கியவர் கோலி மட்டுமே.

ஐந்து முக்கிய பெருமைகள்

ஐந்து முக்கிய பெருமைகள்

இது தவிர கோலி, ஐசிசி ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். ஒரே ஆண்டில் ஐந்து முக்கிய பெருமைகளை பெற்று கிரிக்கெட்டில் தன் ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளார்.

2019 எப்படி?

2019 எப்படி?

இதுவரை எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத சாதனையை செய்து கோலி வரலாற்றில் முத்திரை பதித்துள்ளார். கோலி. இனி அடுத்து வரும் ஆண்டுகளிலும் கோலி தன் தனி ஆவர்த்தனத்தை தொடர்வாரா? அல்லது அவருக்கு போட்டியாக பல வீரர்கள் வருவார்களா? என பார்க்கலாம்.

Story first published: Tuesday, January 22, 2019, 17:17 [IST]
Other articles published on Jan 22, 2019
English summary
Virat Kohli Hatrick record by bagging three ICC awards 2018
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X