For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

குழந்தைபுள்ள மாதிரி விக்கெட் ரிவ்யூக்களை வீணாக்கும் கோலி.. ஏன்பா இப்படி?

லண்டன் : இந்தியா, இங்கிலாந்து ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் கோலி விக்கெட்களுக்கு ரிவ்யூ கேட்பதில் மோசமாக சொதப்பி வருகிறார்.

ஏற்கனவே, முதல் இன்னிங்க்ஸில் யோசிக்காமல் ரிவ்யூ கேட்டு இரண்டு வாய்ப்புகளையும் வீணடித்தார். அப்போதே சிலர் அதை விமர்சித்தனர்.

இரண்டாம் இன்னிங்க்ஸிலும் அதே நிலை தொடர்கிறது. இதில் இன்னும் மோசமாக இன்னிங்க்ஸ் துவங்கிய சில ஓவர்களிலேயே இரண்டு ரிவ்யூகளையும் வீணடித்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார்.

10வது ஓவரில்

10வது ஓவரில்

பத்தாவது ஓவரில் ஜடேஜா வீசிய பந்து இங்கிலாந்து துவக்க வீரர் ஜென்னிங்க்ஸ் காலில் பட்டது. அதற்கு அம்பயரிடம் அவுட் கிடைக்காத நிலையில், ரிவ்யூவுக்கு சென்றார் கோலி. அதில் பந்து அவுட் சைடு ஆப் ஸ்டம்ப்புக்கு வெளியே பிட்ச் ஆகியதால் அவுட் மறுக்கப்பட்டது.

அடுத்த 2 ஓவர்களில்

அடுத்த 2 ஓவர்களில்

முதல் ரிவ்யூ வீணான இரண்டே ஓவர்களில், மீண்டும் அதே ஜடேஜா வீசிய பந்து குக் காலில் பட்டது. இதற்கும் அம்பயர் முடிவுக்கு எதிராக ரிவ்யூ போனார் கோலி. இந்த பந்தும் அதே போல அவுட் சைடு ஆப் ஸ்டம்ப்புக்கு வெளியே பிட்ச் ஆனது. இந்த வாய்ப்பும் வீணானது.

ரெண்டு வாய்ப்பும் போச்சு

ரெண்டு வாய்ப்பும் போச்சு

இருந்த இரண்டு ரிவ்யூ வாய்ப்புகளையும் துவக்கத்திலேயே வீணடித்துவிட்டார் கோலி. இங்கிலாந்து தற்போது 8 விக்கெட்கள் கையில் வைத்து ஆடி வருகிறது. இடையில் ஏதாவது அம்பயர் விக்கெட் மறுக்கும் முடிவுகள் தவறு என உறுதியாக தெரிந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

கோலி நல்ல கேப்டனா?

கோலி நல்ல கேப்டனா?

ஏற்கனவே, தொடரை இழந்து விமர்சனத்தை சந்தித்து வரும் கோலி தலைமை இடத்தில் இருந்து கொண்டு இப்படி முதிர்ச்சியற்ற வகையில் ரிவ்யூ வாய்ப்புகளை வீணடித்து வருவது அவரது கேப்டன் பதவிக்கு அவரே வைத்துக் கொள்ளும் ஆப்பு என்பதை தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை.

விராட் கோலி முதல் இன்னிங்க்ஸில் ரிவ்யூக்களை எப்படி வீணடித்தார் என்ற கதை இந்த லிங்கில் இருக்கிறது. விராட் கோலி முதல் இன்னிங்க்ஸில் ரிவ்யூக்களை எப்படி வீணடித்தார் என்ற கதை இந்த லிங்கில் இருக்கிறது.

Story first published: Monday, September 10, 2018, 14:44 [IST]
Other articles published on Sep 10, 2018
English summary
Virat Kohli is the worst one in DRS review, after he failed 4 times in the 5th test
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X