For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செலக்ட் ஆகணும்..முக்கியத்துவம் கோலிக்கு தெரியும்.கம்பீர்

சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 5ம் தேதி முதல் துவங்கவுள்ளது.

முதல் இரண்டு போட்டிகள் சென்னையிலும் அடுத்த இரண்டு போட்டிகள் அகமதாபாத்திலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 பனியன் போட விடுங்கடா.. கிரிக்கெட்டில் இதுவரை ரசிகர்கள் பார்த்திராத அரிய காட்சி! பனியன் போட விடுங்கடா.. கிரிக்கெட்டில் இதுவரை ரசிகர்கள் பார்த்திராத அரிய காட்சி!

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு தேர்வாவதன் முக்கியத்துவம் கோலிக்கு தெரியும் என்றும் அதற்கு இந்த தொடரை அவர் பயன்படுத்திக் கொள்வார் என்றும் முன்னாள் வீரர் கம்பீர் கூறியுள்ளார்.

சென்னையில் 2 போட்டிகள்

சென்னையில் 2 போட்டிகள்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 வடிவங்களிலான போட்டிகள் அடுத்தடுத்து நடைபெறவுள்ள நிலையில், முதலில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. முதல் இரண்டு போட்டிகள் சென்னையிலும் அடுத்த இரண்டு போட்டிகள் அகமதாபாத்திலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

இறுதிப்போட்டிக்கு தீவிரம்

இறுதிப்போட்டிக்கு தீவிரம்

கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்காமல் இடையிலேயே நாடு திரும்பிய விராட் கோலி இந்த தொடருக்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்தியாவில் நடைபெறும் இந்த தொடரை வெற்றி கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்திய அணி முனைப்புடன் உள்ளது.

சிறப்பான இந்தியா

சிறப்பான இந்தியா

இந்நிலையில் கேப்டன் விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக முன்னாள் இந்திய துவக்க வீரர் கவுதம் கம்பீர் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அணி டெஸ்ட போட்டிகளில் அதிக வளர்ச்சி காணும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முக்கியத்துவத்தை விராட் உணர்ந்திருப்பார்

முக்கியத்துவத்தை விராட் உணர்ந்திருப்பார்

வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி தேர்வாக வேண்டியதன் அவசியம் குறித்து கேப்டன் விராட் கோலி நன்றாக அறிந்திருப்பார் என்றும் அதற்கு தற்போதைய இங்கிலாந்து தொடரை அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வார் என்றும் அவர் மேலும் கூறினார்.

Story first published: Tuesday, February 2, 2021, 11:22 [IST]
Other articles published on Feb 2, 2021
English summary
India has done really well under the leadership of Virat Kohli in Test cricket -Gambhir
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X