For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இப்படி ஒரு ஸ்பெஷலா? இந்தியா சாதிக்க ரசிகர்கள் பிரார்த்தனை

Recommended Video

WORLD CUP 2019 IND VS ENG | இந்தியா-இங்கிலாந்து போட்டியில் ஒரு அசத்தல் தனித்துவம்!

எக்பாஸ்டன்: சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிரான 100வது போட்டியில், ரன்களை எடுத்து இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.

உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் இந்தியா இன்று களமிறங்கியது. இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதும் 100வது சர்வதேச ஒருநாள் போட்டி என்பது கூடுதல் சிறப்பு அம்சம்.

உலக கோப்பை கிரிக்கெட்டின் அறிமுக தொடரான 1975ல், முதல் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. லண்டனில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 334 ரன்கள் சேர்த்தது.

60 ஓவர்கள் போட்டி

60 ஓவர்கள் போட்டி

கடின இலக்கை துரத்திய இந்தியா 60 ஓவர்கள் (அப்போது எல்லாம் ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்சில் 60 ஓவர்கள் வீசப்படும்) முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால், 202 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

கலக்கிய கவாஸ்கர்

கலக்கிய கவாஸ்கர்

இந்த போட்டியில் ஒரு சுவாரசிய நிகழ்வு இருக்கிறது. இதில் தான் இந்திய தொடக்க வீரர் சுனில் கவாஸ்கர், 174 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 36 ரன்கள் சேர்த்து கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். இதுவே, ஒருநாள் கிரிக்கெட்டில் வீரர் ஒருவரின் மந்தமான ஆட்டம் என்று இன்றளவும் விமர்சிக்கப் படுகிறது.

100வது போட்டி

100வது போட்டி

ஒருநாள் கிரிக்கெட்டில், இரு அணிகளும் இதுவரை 99 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், இந்தியா 53 ஆட்டங்களிலும், இங்கிலாந்து 41 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில், 2போட்டிகள் சமனில் முடிந்துள்ளன. 3 போட்டிகளில் முடிவு இல்லை.

3 போட்டிகளில் வெற்றி

3 போட்டிகளில் வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா - இங்கிலாந்து 7 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், இரு அணிகளும் தலா 3 போட்டிகளில் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் சமனில் முடிந்தது.

முதலில் ஆடிய இங்கிலாந்து

முதலில் ஆடிய இங்கிலாந்து

இத்தகைய சாதனைகளுடன் இங்கிலாந்தை, இந்தியா எக்பாஸ்டன் மைதானத்தில் எதிர் கொண்டிருக்கிறது. இங்கிலாந்துக்கு மட்டுமல்ல.. இந்தியாவுக்கு மிக முக்கிய போட்டி. டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் ஆடியது.

ஜேசன் ராய் அதிரடி

ஜேசன் ராய் அதிரடி

தொடக்க வீரர்களான ஜேசன் ராய், பெயர்ஸ்டோவ் ஆகியோரின் அதிரடி ஆட்டம் மலைக்க வைத்தது. சொல்லி அடித்தபடி, ரன்களை இருவரும் குவித்தனர். இங்கிலாந்து நிச்சயம் 400 ரன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குல்தீப் பந்தில் ராய் கேட்சாக ரன் விகிதம் மட்டுப்படுத்தப்பட்டது.

338 ரன்கள் இலக்கு

338 ரன்கள் இலக்கு

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 337 ரன்கள் எடுத்திருக்கிறது. 338 ரன்களை இந்தியா எடுத்து, அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்பதோடு, இங்கிலாந்து, இந்தியாவுக்கும் இடையேயான 100 சர்வதேச போட்டி என்பதால் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்றும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Story first published: Sunday, June 30, 2019, 19:10 [IST]
Other articles published on Jun 30, 2019
English summary
Will india win their 100th odi against England?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X