For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி இத்தனை வருஷம் கிரிக்கெட் ஆடுறாருன்னா.. அதுக்கு இதுதான் காரணம்.. நண்பன் யுவராஜ் சிங் பெருமிதம்!

மும்பை : தன் நண்பன் தோனி எப்படி நீண்ட நாட்களாக அசராமல் கிரிக்கெட் ஆடி வருகிறார் என்பது குறித்து பேசிய யுவராஜ் சிங், 2011 உலகக்கோப்பை தொடரில் நடந்த சம்பவம் ஒன்றை சுட்டிக் காட்டி அதற்கான காரணத்தை கூறியுள்ளார்.

தோனி தற்போது நடைபெற உள்ள 2019 உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெற உள்ளார் என சில தகவல்கள் கூறுகின்றன. ஆனால், தோனி இன்னும் நல்ல பார்மில் இருக்கிறார்.

உலக கோப்பையில் விளையாடுவாரா மார்க் உட்..? நீடிக்கும் சஸ்பென்ஸ்...!! மருத்துவ அறிக்கை கூறுவது என்ன? உலக கோப்பையில் விளையாடுவாரா மார்க் உட்..? நீடிக்கும் சஸ்பென்ஸ்...!! மருத்துவ அறிக்கை கூறுவது என்ன?

மிரள வைக்கும் தோனி

மிரள வைக்கும் தோனி

தோனியின் விக்கெட் கீப்பிங் முன்பைக் காட்டிலும் பலமடங்கு முன்னேறி உள்ளது. இப்போதும் அரை நொடியில் அவர் செய்யும் ஸ்டம்பிங் கிரிக்கெட் இலகை மிரள வைத்து வருகிறது. பேட்டிங்கிலும் இன்னும் பொறுப்பாக ஆடி ரன் குவித்து வருகிறார். இது எப்படி அவரால் மட்டும் முடிகிறது?

கூர்மையான மனது

கூர்மையான மனது

இதுபற்றி யுவராஜ் சிங்கிடம் கேட்ட போது, "பல வருடங்களுக்கு சர்வதேச போட்டிகளில் ஆடி வந்தால், சில சமயம் நம்மால் சரியாக பேட்டிங் ஆட முடியாத நிலை ஏற்படும். ஆனால், தோனிக்கு மனது கூர்மையாக இருக்கிறது.. அவருக்கு எப்போது சிங்கிள் எடுக்க வேண்டும், எப்போது பெரிய ஷாட்களை அடிக்க வேண்டும் என்பது தெரியும்" என்றார்.

கடின உழைப்பு

கடின உழைப்பு

தோனியின் கடின உழைப்பு தான் அவர் நீண்ட காலம் கிரிக்கெட்டில் நிலைத்து நிற்கக் காரணம் என்று கூறிய யுவராஜ் சிங், கடந்த 2011 உலகக்கோப்பை தொடரில் நடந்த சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்தார்.

ஏழு நாட்களிலும்..

ஏழு நாட்களிலும்..

"அவர் எப்போதும் கடுமையாக உழைப்பவர். 2011 உலகக்கோப்பை தொடரின் போது ஏழு நாட்களில் எங்களுக்கு இரண்டு நாட்கள் விடுப்பு (பயிற்சி இல்லாத நாட்கள்) இருக்கும். ஆனால், தோனி ஏழு நாட்களிலும் பேட்டிங் செய்வார்"

கொஞ்சம் அதிகம்தான்

கொஞ்சம் அதிகம்தான்

"அவர் அதிகப்படியாகவே பேட்டிங் பயிற்சி செய்கிறார் என்று எனக்குத் தோன்றும். அவர் மிக கடுமையாக உழைப்பவர். அதனால்தான் அவர் நீண்ட காலம் நீடித்து இருக்கிறார்" என்று தோனி குறித்து கூறினார் யுவராஜ் சிங். தோனி - யுவராஜ் சிங் இடையிலான நட்பு பலரும் அறிந்த ஒன்றே. கொஞ்சம் விசித்திரமானதும் கூட.

யுவராஜ் சிங் முன்னேற்றம்

யுவராஜ் சிங் முன்னேற்றம்

தோனி தான் மாநில அணிக்காக ஆடிய காலத்தில், யுவராஜ் சிங் ராஞ்சி தொடர்களில் கலக்கிக் கொண்டு இருந்தவர். பின், அண்டர் 19 உலகக்கோப்பை, இந்திய அணி என அவர் முன்னேறியதை கீழே இருந்து பார்த்துக் கொண்டு இருந்தார் இளம் தோனி.

கேப்டன் ஆன தோனி

கேப்டன் ஆன தோனி

பின், தோனி போராடி இந்திய அணியில் இடம் பெற்று பின் கேப்டனாகவும் உயர்ந்து, தான் பார்த்து வியந்த யுவராஜ் சிங்கிற்கு கேப்டனாக செயல்பட்டார். அப்போது அவர்கள் இடையே இருந்த நட்பு வலுப்பெற்றது.

உலகக்கோப்பை

உலகக்கோப்பை

2011 உலகக்கோப்பை தொடரில் யுவராஜ் சிங்கை ஆதரித்தார் தோனி. அதே போல, யுவராஜ் சிங் யாருமே எதிர்பாராத டாப் பார்மில், ஒரு கலக்கு, கலக்கி இந்திய அணிக்கு உலகக்கோப்பை வென்று கொடுத்தார்.

பலமான நட்பு

பலமான நட்பு

அதன் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை புற்றுநோய், பார்ம் அவுட் என தடம் புரண்டாலும், இப்போதும், தோனி - யுவராஜ் சிங் நட்பு பலமாக இருக்கிறது. தோனி - யுவராஜ் சிங் இருவரும் 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் தங்கள் ஓய்வு அறிவிப்பை வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது.

Story first published: Tuesday, May 28, 2019, 11:06 [IST]
Other articles published on May 28, 2019
English summary
World cup 2019 : Why Dhoni has been around for so long? Explains Yuvraj Singh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X