For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல் உலகப்போரில் உதவிய இந்திய வீரர்கள்... கிரிக்கெட் மூலம் நினைவுகூரும் இங்கிலாந்து

லண்டன் : இந்தியா, இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி இடையே, ஒரு சிறிய நினைவு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.

பிரிட்டிஷ் காலனியில் இருந்த இந்தியா, முதல் உலகப் போரில் இங்கிலாந்து நாட்டுக்கு செய்த உதவியை நினைவு கூரும் விதமாக நடத்தப்பட்டது இந்த போட்டி.

இது நேற்று ஞாயிற்றுக்கிழமை டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளின் முதல் பகுதி இடைவேளை நேரத்தில் இந்த போட்டி சிறிய அளவில் நடத்தப்பட்டது.

அந்த காலத்திய உடைகள்

முதல் உலகப் போர் காலத்தை நினைவுபடுத்தும் வகையில் வீரர்கள் உடை அணிந்து வந்தனர். குறிப்பாக இந்திய ராணுவத்தில் இருந்த சீக்கிய ராணுவ பிரிவு போல உடை அணிந்து வந்த நபர்கள், ராயல் மான்செஸ்டர் படைப்பிரிவோடு மோதினர்.

மற்றொரு போட்டி

மற்றொரு நிகழ்ச்சியாக ராயல் பிரிட்டிஷ் பிரிவும், சர்ரே பிரிவும் கிரிக்கெட் போட்டியில் மோதின. இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்கள் சிலரும், இந்தியர்கள் சிலரும் முதல் உலகப் போர் உடைகளை அணிந்து வந்து இந்த போட்டியில் பங்கேற்றனர்.

காதி உடைகள்

மேலும் இந்த ஆண்டு, இந்தியாவின் முதல் உலகப்போர் பங்களிப்பை நினைவுபடுத்தும் வகையில் காதி உடைகளை இங்கிலாந்தில் வசிக்கும் பிரிட்டிஷ் இந்திய குடும்பத்தினரிடம் விநியோகிக்க உள்ளனர்.

இந்தியர்கள் பங்களிப்பு என்ன?

முதல் உலகப் போரில் இந்தியா சார்பாக பல லட்சம் வீரர்கள் இங்கிலாந்துக்காக போரிட்டுள்ளனர். அதில் 62000 வீரர்கள் இறந்துள்ளனர். 67000 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

Story first published: Monday, September 10, 2018, 14:01 [IST]
Other articles published on Sep 10, 2018
English summary
WW1 special remembrance match conducted at Oval London in the 5h test between India england
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X