For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பேட்டால் பேசும் யுவராஜ் சிங்.. என் கதை இன்னும் முடியலை.. 5 சிக்ஸர்கள்.. 96 ரன்கள்

Recommended Video

பேட்டால் பேசும் யுவராஜ் சிங். 5 சிக்ஸர்கள்.. 96 ரன்கள்- வீடியோ

பெங்களூரு : தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்காக யுவராஜ் சிங் ஆடி வருகிறார்.

நேற்று நடைபெற்ற போட்டியில் நீண்ட நாட்கள் கழித்து தன் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார். நேற்று சிக்ஸர்களும் பறக்கவிட்டார் யுவராஜ் சிங்.

யுவராஜ் சிங்குக்கு வயதாகி விட்டது. அவர் இனிமேல் கிரிக்கெட் விளையாட முடியாது என கூறி வருபவர்களுக்கு பேட்டால் பதில் சொல்லியுள்ளார் யுவராஜ் சிங்.

நிலைத்து ஆடிய யுவராஜ் சிங்

நிலைத்து ஆடிய யுவராஜ் சிங்

நேற்று நடைபெற்ற ரயில்வே அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் வோஹ்ரா 13, ஷுப்மன் கில் 53 ரன்கள் அடித்து வெளியேறினர். அடுத்து வந்த யுவராஜ் சிங் நிலைத்து நின்று ஆடினார். குர்கீரத் சிங் உடன் இணைந்து கூட்டணி போட்ட யுவராஜ் 96 ரன்கள் அடித்து வெளியேறினார். இதில் 6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடங்கும். மறுபுறம் குர்கீரத் சிங் சதம் அடித்து ஆட்டமிழந்தார். 50 ஓவர்களில் 284 ரன்கள் எடுத்தது பஞ்சாப். அடுத்து ஆடிய ரயில்வே அணி 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

வேகம் இல்லை

வேகம் இல்லை

யுவராஜ் கடைசியாக ஜூன் 2017இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆடினார். அவர் முன்பு போல களத்தில் வேகமாக செயல்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு அப்போது இருந்தது. யுவராஜ் முன்பெல்லாம் பீல்டிங்கில் கில்லி மாதிரி சொல்லி அடிப்பார். அந்த வேகம் குறைந்தது உண்மைதான்.

நம்பிக்கை அளித்துள்ளார்

நம்பிக்கை அளித்துள்ளார்

2011 உலகக்கோப்பை நாயகனான யுவராஜ் சிங் மீண்டும் பார்முக்கு வந்து சிக்ஸர் மழை பொழிய வேண்டும் என அவரது ரசிகர்கள் எண்ணிக் கொண்டு இருக்க, அதற்கேற்றார் போல, நேற்று 96 ரன்கள் அடித்து கொஞ்சம் நம்பிக்கை அளித்துள்ளார் யுவராஜ் சிங்.

இந்திய அணியில்

இந்திய அணியில்

யுவராஜ் சிங் தன் ஓய்வு முடிவை 2019இல் தெரிவிப்பேன் என முன்பு கூறியிருந்தார். அவர் உலகக்கோப்பை அணியில் இடம் பிடிக்க நினைக்கிறார் என சில செய்திகள் வருகின்றன. விஜய் ஹசாரே தொடரில் தொடர்ந்து இது போல அரைசதம், சதம் என அடித்து வந்தால் யுவராஜ் இந்திய அணியில் இடம் பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது.

Story first published: Wednesday, October 3, 2018, 11:02 [IST]
Other articles published on Oct 3, 2018
English summary
Yuvraj Singh back on form in VIjay Hazare trophy after a 96 run knock, which includes 5 sixes.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X