For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

6..6..6..6..6... சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் யுவராஜ் சிங்!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இந்திய அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங் முடிவெடுத்துள்ளார்.

டெல்லி: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங் அறிவித்துள்ளார்.

இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டர், அதிரடியான ஆட்டக்காரர் யார் என்று கேட்டால் எல்லோரும் கண்டிப்பாக யுவராஜ் சிங்கைதான் கை காட்டுவார்கள். அந்த அளவிற்கு இந்திய அணியில் இவர் மிக முக்கியமான வீரராக இருந்தார்.

இந்திய அணிக்காக இவர் தன் வியர்வையை ரத்தமாக கொடுத்து போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிராக 6 சிக்ஸ் அடித்தது தொடங்கி உலகக் கோப்பை 2011 போட்டியை வென்றது வரை இவர் தொடாத சாதனையே கிடையாது.

கேன்சர் வந்தது

கேன்சர் வந்தது

இந்த நிலையில் உலகக் கோப்பையில் வென்று சில மாதங்களில் இவருக்கு கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து சிறிய பிரேக் எடுக்க போவதாக அறிவித்தார். ஆனால் அது அவரின் வாழ்க்கையிலேயே மிகப்பெரிய பிரேக்காக இருந்தது. ஆம் அதன்பின் அவரால் பழைய யுவராஜ் சிங்காக திரும்ப முடியவில்லை.

என்ன செய்தார்

அதன்பின் ஒருவருடம் யுவராஜ் சிங் சிகிச்சை பெற்றார். இதனால் அவர் கிரிக்கெட் விளையாடவே முடியவில்லை. அதன்பின் முழுவதுமாக குணம் அடைந்து மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார். அவர் பயிற்சிக்கு திரும்பினாலும் கூட கொஞ்சம் கூட பார்மிற்கு திரும்ப முடியவில்லை. கேன்சர் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த பின் இந்திய அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்க முடியாமல் யுவராஜ் சிங் திணறி வந்தார்.

மோசமாக ஆடினார்

மோசமாக ஆடினார்

அவர் எடுக்கப்பட்ட டி 20 உலகக் கோப்பை போட்டியில் மிக மோசமாக ஆடினார். தான் விளையாடிய அனைத்து ஐபிஎல் போட்டியிலும் மோசமாக ஆடினார். இதனால் தொடர்ந்து இவர் ஐபிஎல் அணிகளால் புறக்கணிக்கப்பட்டார். அதோடு இந்திய அணியிலும் இவர் புறக்கணிக்கப்பட்டார். இந்திய அணி மட்டும் இல்லாமல் ரஞ்சி அணியிலும் கூட அவருக்கு சரியான வாய்ப்புகள் இல்லை.

எல்லாம் போனது

எல்லாம் போனது

பாண்டியா, ராகுல், தினேஷ் கார்த்திக் என அவரது இடத்தில் ஆட நிறைய வீரர்கள் வரிசைக்கட்டி நின்றதால், இதனால் நாளுக்கு நாள் அவரது வாய்ப்பு கானல் நீராக மாறியது. எல்லா வருடமும் இவர் ஐபிஎல் அணி மாற வேண்டிய நிலை ஏற்பட்டது.

நல்லது

நல்லது

இவர் சில மாதம் முன்புதான் கஷ்டமான யோ யோ டெஸ்டில் யுவராஜ் சிங் கலந்து கொண்டார். அதில் மிகவும் சிறப்பாக செயலாற்றி அவர் தனது பிட்னஸை நிரூபித்தார். ஆனாலும் பிட்னஸ் என்பது உடலில் மட்டும் இல்லை மனதிலும்தான். மனதளவில் இவர் இந்திய அணிக்கு விளையாட தகுதி பெறவே இல்லை.

சொன்னது என்ன

சொன்னது என்ன

2018ல் பேட்டி அளித்த இவர், தான் ஓய்வு அடையும் நாள் குறித்தும் பேசினார். அதில் "எனக்கு வயது கூடிக்கொண்டே போகிறது. இனி எந்த மாதிரியான கிரிக்கெட் போட்டியில் நான் விளையாடுவேன் என்று தெரியவில்லை. 2019க்கு பின் ஓய்வு குறித்து அறிவித்துவிடுவேன். அதற்கு மேல் விளையாடுவது சந்தேகம்தான்'' என்று குறிப்பிட்டார்..

ஓய்வு அறிவிக்கிறார்

ஓய்வு அறிவிக்கிறார்

இந்த நிலையில் தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து சொன்னபடியே ஓய்வு அறிவிக்க முடிவெடுத்து உள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங் அறிவித்துள்ளார். இத்தனை வருடம் தனக்கு ஆதரவு அளித்த அனைவர்க்கும் நன்றி என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, June 10, 2019, 13:56 [IST]
Other articles published on Jun 10, 2019
English summary
Indian cricketer Yuvraj Singh will announce his retirement today from all form of cricket.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X