For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

கோல் மழை பொழிந்த வீரர்கள்..!! பெங்களூரு அணி அசத்தல் வெற்றி

கோவா; ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் 2வது லீக் ஆட்டம் நேற்று கோவாவில் நடைபெற்றது. இதில் பெங்களூரு அணியும், நார்த் ஈஸ்ட் யுனைடட் அணியும் மோதின.

கோவாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முழுவதுமே இரு அணி வீரர்களும் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.

நியூசிலாந்துக்கு ஓயிட்வாஷ் அடிக்க ரோகித் படை ரெடி.. இந்தியாவின் புதிய பிளான் என்ன?நியூசிலாந்துக்கு ஓயிட்வாஷ் அடிக்க ரோகித் படை ரெடி.. இந்தியாவின் புதிய பிளான் என்ன?

மழைக்கு நடுவே இரு அணி வீரர்களும் கோல் மழை பொழிந்தனர். முடிவில் பெங்களுரு அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

பரபரப்பான ஆட்டம்

பரபரப்பான ஆட்டம்

இந்த ஆட்டத்தில் முதல் 25 நிமிடங்களிலே இரு அணிகளும் தலா 2 கோல்களை அடித்ததால் போட்டியில் அனல் பறந்தது. ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் உதாண்டா சிங் கடத்தி வந்த பந்தை, லாவகமாக பெற்று கொண்ட சில்வா, அதனை யுனைடட் வீரரை மீறி கோல் அடித்தார்.அடுத்த 3 நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணி பதிலடி தந்தது

முதல் பாதி

முதல் பாதி

ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் பெங்களூரு அணிக்கு லக் அடித்தது. பெங்களூரு அணி வீரர் ஆஷிக்கி அடித்த பந்த கோல் போஸ்டில் அடித்து திரும்பி வர, அதனை தடுக்கும் முயற்சியில் நார்த் ஈஸட் அணி வீரர் செரிஃப் ஈடுபட்ட போது, அது சேம் சைட் கோலாக மாறியது. இருப்பினும் அடுத்த சில நிமிடங்களிலேயே நார்த் ஈஸ்ட் அணி 2வது கோல் அடித்து ஸ்கோரை சமன் செய்தனர்

ஆதிக்கம்

ஆதிக்கம்

இதன் பின்னர் பெங்களூரு அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சுனில் செற்றி கோல் அடிக்கும் வாய்ப்பை வீணடிக்க, 42வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் ஜெயேஷ் ரானே 3வது கோல் அடித்தார். ஆட்டத்தின் 2வது பாதியிலும் பெங்களூரு அணியின் கையே ஓங்கி இருந்தது.ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் இபாரா கோல் போட, பெங்களூரு அணி 4க்கு2 என்ற கோல் கணக்கில் வென்றது.

இன்றைய ஆட்டம்

இன்றைய ஆட்டம்

இன்றைய ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியும், ஜம்ஷத்பூர் அணியும் மோதுகின்றன. இரு அணிகளும் சீசன் தொடங்குவதற்கு முன் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா மூன்று போட்டிகிளில் வென்று நல்ல பார்மில் உள்ளன.

Story first published: Sunday, November 21, 2021, 12:44 [IST]
Other articles published on Nov 21, 2021
English summary
ISL Football Bengaluru FC Beat Northeast united FC by 4-2 Goal scoreline. In arainy Game. Both Team Plays Attacking game where Benagaluru had a last laugh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X