For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதல் முறையா பணத்தை பரிசா கொடுக்கப் போறோம்.. புதிய பாதையில் இந்திய ஒலிம்பிக் சங்கம்

டெல்லி : இந்திய ஒலிம்பிக் சங்கம் தன் வரலாற்றில் முதல் முறையாக பதக்கம் வென்ற வீரர்களுக்கு பரிசுப் பணம் அளிக்க முடிவு எடுத்துள்ளது.

இதுவரை இந்திய ஒலிம்பிக் சங்கம் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பரிசுப் பணம் அளிக்காமல், வெறும் பாராட்டு மட்டுமே அளித்துள்ளது என்பதே நம்மில் பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்.

Indian Olympic Association for the first time going to pay cash rewards

ஆனால், இந்தியாவில் இதுவரை அது தான் நிலைமை. எப்படியோ இப்போது சில ஸ்பான்சர்கள் கிடைத்து உள்ளதால் இந்த பரிசுப் பணம் வழங்கும் முடிவை இந்திய ஒலிம்பிக் சங்கம் எடுத்துள்ளது.

அதன்படி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற வீரர்களுக்கு 5 லட்சம், வெள்ளி வென்ற வீரர்களுக்கு 3 லட்சம், வெண்கலம் வென்ற வீரர்களுக்கு 2 லட்சம் வழங்க முடிவு செய்துள்ளது இந்திய ஒலிம்பிக் சங்கம்.

சமீபத்தில், விளையாட்டு அமைச்சகம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பரிசுப் பணம் வழங்கியது. விளையாட்டு அமைச்சகம் தங்கம் வென்றவர்களுக்கு 40 லட்சம், வெள்ளி வென்ற வீரர்களுக்கு 20 லட்சம், வெண்கலம் வென்ற வீரர்களுக்கு 10 லட்சம் வழங்கியது.

இதுவரை மாநில அரசுகள் மட்டுமே கோடிகளில் பரிசு அளித்து விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன. இனியாவது மதிய அரசு விளையாட்டு வீரர்களின் வேலைவாய்ப்பு, பயிற்சி உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்து மற்றவர் உதவியை அவர்கள் எதிர்பார்த்து இருக்கும் நிலையை மாற்ற வேண்டும்.

Story first published: Thursday, September 20, 2018, 18:28 [IST]
Other articles published on Sep 20, 2018
English summary
Indian Olympic Association for the first time going to pay cash rewards
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X