For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தென் ஆப்பிரிக்கா vs இந்தியா: உலக கோப்பையில் இந்தியாவுக்கு நாளை அக்னி பரிட்சை!

By Veera Kumar

மெல்போர்ன்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நாளை மோத உள்ளது இந்திய அணி. உலக கோப்பையில் 'உண்மையான முதல் சவாலை' இந்தியா இப்போதுதான் சந்திக்கப்போகிறது என்றும் இதை கூறலாம்.

இந்தியா தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானை 76 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தி, 6 முறையும் உலக கோப்பையில் வெற்றி பெற்ற அணியாக வலம் வரலாம். ஆனால் உலக கோப்பை தொடரில் இதுவரை இந்தியாவால் வெல்லப்படாத அணியாக உள்ள தென் ஆப்பிரிக்காவிடமிருந்து அந்த பெருமையை தட்டிப் பறிப்பது என்பது மிகப்பெரிய பணியாக இருக்கப்போகிறது.

தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள்

தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள்

1992ல் பீட்டர் கிறிஸ்டனின் 92 ரன்களும், 1999 மற்றும் 2011ல் கல்லீசின் அதிரடியும் இந்தியாவிடமிருந்து வெற்றி வாய்ப்பை பறித்து தென் ஆப்பிரிக்காவுக்கு கொடுத்தன. ஏதாவது ஒரு பேட்ஸ்மேன் கிளிக் ஆகி இந்திய அணியின் உடலில் முள்ளாய் புகுந்து கொடுமை செய்த வரலாறுதான் மேற்கண்ட மூன்று உலக கோப்பைகளிலும் நடந்தது.

முதல் பேட்டிங்கால் 'முதல்' இழந்தது

முதல் பேட்டிங்கால் 'முதல்' இழந்தது

கடந்த மூன்று முறையுமே இந்தியாதான் முதலில் பேட்டிங் செய்து தோற்றுள்ளது. எனவே நாளை டோணி டாஸ் வெற்றி பெற்றால், பாகிஸ்தானுடன்போல முதலில் பேட்டிங் செய்ய விரும்புவாரா அல்லது கடந்த காலத்தை எண்ணி, 2வதாக பேட்டிங் செய்ய முடிவு செய்வாரா என்பது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் கை ஓங்கியுள்ளது

தென் ஆப்பிரிக்காவின் கை ஓங்கியுள்ளது

இந்தியாவை விட தென் ஆப்பிரிக்காவே அனைத்து பிரிவுகளிலும் பலம் வாய்ந்த அணியாக தென்படுகிறது. ஆனால் தடுமாறி வந்த இந்தியா, பாகிஸ்தான் போட்டியின்போதுதான் தனது பழைய ஆதிக்கத்தை காண்பித்தது. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சற்று தடுமாறியே தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருந்தாலும், அந்த அணியின்டுமினி, டேவிட் மில்லர் ஆகியோர் விக்கெட் சரிவை மீட்டு தென் ஆப்பிரிக்காவை வெற்றிபெற வைத்த விதம் வியப்புக்குறியது.

வேகப்பந்து அச்சுறுத்தல்

வேகப்பந்து அச்சுறுத்தல்

உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், மோர்ன் மோர்க்கல் ஆகியோரின் கூட்டணியில் ஸ்விங் பவுலர் பிலேண்டர் அல்லது வேன் பர்னெல் வேகப்பந்து பிரிவை கவனித்துக்கொள்ள உள்ளார்கள். 6.4 அடி உயரம் கொண்ட மோர்க்கலுக்கு, பவுன்சருக்கு சாதகமான, மெல்போர்ன் பிட்ச் மிகவும் கை கொடுக்கும். ஸ்பின்னர்களில் யாரை களமிறக்குவது என்பதில் தென் ஆப்பிரிக்கா இன்னும் ஒரு முடிவிற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

பேட்டிங்கிலும் பலம்

பேட்டிங்கிலும் பலம்

தென் ஆப்பிரிக்கா வெறுமனே வேகப்பந்து வீச்சை மட்டுமே நம்பியுள்ள அணியும் கிடையாது. சமீபத்தில்தான் 31 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனைபடைத்த ஏபிடிவில்லியர்ஸ் அந்த அணியின் கேப்டன். எப்போதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஹசிம் ஆம்லா, டு பிளிசிஸ், டுமினி, மில்லர் போன்றோர் அந்த அண்ணியின் ஹை-கிளாஸ் பேட்ஸ்மேன்களாகும்.

இந்திய அணியின் பலவீனங்கள்

இந்திய அணியின் பலவீனங்கள்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்றிருந்தாலும் சில விஷயங்களில் இந்திய அணி பின்தங்கியே உள்ளது. குறிப்பாக கேப்டன் டோணி ஃபார்மில் இல்லாதது அணிக்கு பின்னடைவாகும். கடந்த சில தினங்களாக பவுன்சரை சந்திக்க வலைப்பயிற்சியில் டோணி தீவிரமாக ஈடுபட்டுவருவது அவருக்கு கைகொடுக்கும் என்று நம்பலாம். கடைசி கட்டத்தில் சீட்டுக்கட்டு போல சரியும் பேட்டிங்கும் இந்தியாவுக்கு பலவீனமாகும்.

ஸ்பின்னர்கள் கையில்தான் மேட்ச்

ஸ்பின்னர்கள் கையில்தான் மேட்ச்

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அனுபவம் இல்லாதவர்கள். தொடர்ந்து சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தாதவர்கள். பாகிஸ்தானிடம் சிறந்த பேட்ஸ்மேன்கள் இல்லாததால் நமது பவுலரர்களால் அவர்களை மடக்க முடிந்தது. ஆனால் உமேஷ் யாதவும், முகமது ஷமியும் சரியான அளவில், உயரத்தில் பந்துபோட தவறினால் கடுமையான ஷாட்டுகள் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களிடமிருந்து வெளிப்படுவதை தடுக்க முடியாமல் போகும். இந்தியாவின் நம்பிக்கையே அதன் ஸ்பின்னர்கள் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா மீதுதான் உள்ளது. இவ்விருவரும் வீசப்போகும் 20 ஓவர்கள்தான் மேட்சை மாற்றும் என்று நம்புகின்றது அணி.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

டோணி (கேப்டன்), ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, விராட் கோஹ்லி, அஜிங்ய ரஹானே, சுரேஷ் ரெய்னா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், மோஹித் ஷர்மா, அம்பத்தி ராயுடு, புவனேஸ்வர் குமார், அக்சர் பட்டேல் மற்றும் ஸ்டூவர்ட் பின்னி.

தென் ஆப்பிரிக்க அணி விவரம்

தென் ஆப்பிரிக்க அணி விவரம்

ஏபிடி வில்லியர்ஸ் (கேப்டன்), ஹசிம் ஆம்லா, குயின்டர் டி காக் (விக்கெட் கீப்பர்), டு பிளிசிஸ், டேவிட் மில்லர், டுமினி, பர்கான் பெகர்டின், மோர்ன் மோர்கல், டேல் ஸ்டெயின், வெரோன் பிலான்டர், இம்ரான் தாகிர், கைல் அப்பாட், ரில்லே ருஸ்சவு, ஆரோன் பன்கிஸோ, வைன் பர்னல்.

நடுவர்கள்

நடுவர்கள்

ரிச்சர்ட் கெட்லிபோரக் (இங்கிலாந்து), அலீம் தார் (பாகிஸ்தான்). போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 9 மணிக்கு ஆரம்பிக்கிறது.

Story first published: Saturday, February 21, 2015, 15:59 [IST]
Other articles published on Feb 21, 2015
English summary
Buoyed by their overwhelming victory against arch rivals Pakistan in the opening game, India will aim to turn the tables when they meet a formidable South Africa in the ICC World Cup, here tomorrow.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X