For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தம்பி பிரக்ஞானந்தாவைத் தொடர்ந்து... சென்னையின் வைஷாலி சாதனை.. பெண்கள் கிராண்ட் மாஸ்டரானார்!

தம்பி பிரக்ஞானந்தாவைத் தொடர்ந்து சென்னையின் வைஷாலியும் கிராண்ட் மாஸ்டரானார்.

சென்னை: சென்னையைச் சேர்ந்த 12 வயது பிரக்ஞானந்தா, இந்தியாவின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றதைத் தொடர்ந்து, அவருடைய சகோதரி வைஷாலியும் மகளிர் கிராண்ட் மாஸ்டரானார்.

சென்னையைச் சேர்ந்த 12 வயதாகும் பிரக்ஞானந்தா இந்தாண்டு ஜூன் மாதம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றார். மிகவும் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டரான இந்தியர் என்றப் பெருமையை அவர் பெற்றார்.

Vaishali became indias latest woman grand master

அவருடைய சகோதரி ஆர்.வைஷாலி மூன்றாவது மற்றும் கடைசி தகுதியைப் பெற்று, மகளிர் கிராண்ட் மாஸ்டரானார். இதன் மூலம் கொனேரு ஹம்பி மற்றும் ஹரிகா துரோனவல்லிக்குப் பிறகு கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெறும் மூன்றாவது இந்திய வீராங்கனையானார்.

லாட்வியாவில் நடக்கும் 8வது ரிகா பல்கலைக்கழக ஓபன் செஸ் போட்டியின்போது, கிராண்ட் மாஸ்டர் தகுதியை வைஷாலி பெற்றார்.

சமீபத்தில் ஈரானில் நடந்த ஆசிய போட்டியில் பிளிட்ஸ் பிரிவில் தங்கம் வென்ற இந்தியக் குழுவில் வைஷாலி இடம்பெற்றிருந்தார்.

பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலியின் கோச் ரமேஷ், இந்த சாதனைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதைத் தவிர பலரும் வைஷாலிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Monday, August 13, 2018, 11:48 [IST]
Other articles published on Aug 13, 2018
English summary
After praggnanandhaa his sister vaishali also became grand master.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X