For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Olympic 2020: கொரோனா பாசிட்டிவ்.. வெளியேறிய "உலக சாம்பியன்".. கலக்கத்தில் போட்டியாளர்கள்

ஜப்பான்: கொரோனா தொற்று காரணமாக அமெரிக்க போல் வால்ட் சாம்பியன் ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் டோக்கியோவில் 3,000 பாதிப்புகள் பதிவானது.

அதேபோல், ஒலிம்பிக் கிராமத்தில் இதுவரை 155 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒலிம்பிக் 2020 தொடரில் அமெரிக்கா, சிலி, செக் குடியரசு, சிலி, தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, டச் ஆகிய நாட்டு வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர் குழுவினர் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்

ஒலிம்பிக் விவகாரத்தில் தலையிட்ட ரவி சாஸ்திரி.. மன அழுத்தம் வந்த பிரச்னை.. வீராங்கனைகளுக்காக ஆதரவு! ஒலிம்பிக் விவகாரத்தில் தலையிட்ட ரவி சாஸ்திரி.. மன அழுத்தம் வந்த பிரச்னை.. வீராங்கனைகளுக்காக ஆதரவு!

கொரோனா

கொரோனா

இந்நிலையில், அமெரிக்காவின் போல் வால்ட் வீரர் சாம் கெண்ட்ரிக்ஸ் கொரோனா காரணமாக ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறியுள்ளார். அமெரிக்க ஒலிம்பிக் சங்கம் இதனை உறுதி செய்துள்ளது. அதாவது, இன்று (ஜுலை.29) கொரோனா பாதிப்பு காரணமாக, கெண்ட்ரிக்ஸ் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

 மீண்டும் கோவிட்

மீண்டும் கோவிட்

கெண்ட்ரிக்ஸ் வெளியேறுவதாக அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில், அர்ஜெண்டினா போல் வால்ட் வீரர் ஜெர்மன் சியாராவிக்லியோ என்பவரும் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார்.

 பெரும் சறுக்கல்

பெரும் சறுக்கல்

அமெரிக்க வீரர் கெண்ட்ரிக்ஸ் கடந்த 2017 மற்றும் 2019ல் உலக சாம்பியன்ஷிப் தொடரில் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்த டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா காரணமாக அவர் வெளியேறி இருப்பது நிச்சயம் அமெரிக்காவின் தங்க வேட்டைக்கு பெரும் சறுக்கலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

 தீவிர நடவடிக்கை

தீவிர நடவடிக்கை

ஒலிம்பிக் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நிலையில், கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல ஒலிம்பிக் கிராமத்தில் அதிகரித்து வருகிறது. இதனால், போட்டியளார்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர். இதனால், ஒவ்வொரு நாடுகளின் நிர்வாகமும் தங்கள் வீரர்களை பாதுகாப்பதில் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

Story first published: Thursday, July 29, 2021, 18:52 [IST]
Other articles published on Jul 29, 2021
English summary
Pole Vault Champion Sam Kendricks Out of Olympics - கொரோனா
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X