உடல் வலி பெரிதில்லை.. மனசுதான் வலிக்கிறது.. மீண்டும் களம் இறங்குவேன் - சானியா மிர்சா

Posted By:

ஹைதராபாத்: 6 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம், 36 வயதிலும் விடாமல் ஆடிக்கொண்டு இருக்கும் திறமை இதுதான் சானியா மிர்சாவின் பலம். பெரிய புகழ் கிடைக்காத விளையாட்டில் பெண்ணாக முட்டி மோதி, இந்திய டென்னிஸ் உலகின் பெண் அடையாளமாக மாறி உள்ளார்.

கிரிக்கெட் வீரர் ஸ்டெயினை எப்படி உடல் காயம் ஒரு வருடமாக முடக்கி போட்டு இருக்கிறதோ அப்படித்தான் இவரையும் உடல் காயம் முடக்கி இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் காயம் காரணமாக போட்டிகளில் இருந்து விலகினார்.

தற்போது அவரது வீட்டில் ஒய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறார். இன்னும் இவர் களம் இறங்க சில நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

முக்கியம்

முக்கியம்

கடந்த வருடமே இவர் நிறைய கிராண்ட்ஸ்லாம் போட்டிகளை விளையாடாமல் போய்விட்டார். இந்த வருடத்தில் நடக்கும் முதல் போட்டியிலும் விளையாட முடியாமல் போய்விட்டது. அவர் மீண்டும் வர இன்னும் 2 மாதம் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

காயத்திற்கு ஆப்ரேஷன்

காயத்திற்கு ஆப்ரேஷன்

இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர் ''என்னுடைய வலது காலில் பயிற்சி செய்யும் போது அடிப்பட்டது. அப்போதில் இருந்து என்னால் விளையாட முடியவில்லை. இப்போது ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் சரியாக 2 மாதம் ஆகும்'' என்று கூறியுள்ளார்.

மனசு

மனசு

மேலும் ''எனக்கு இந்த உடல் வலி பெரிதில்லை. இப்போது உடல் வலிக்கு மருந்து எடுப்பதை கூட விட்டுவிட்டேன். எனக்கு மனசு வலிதான் பெரிதாக இருக்கிறது. என்னால் விளையாடாமல் இருக்க முடியவில்லை'' என்றுள்ளார்.

எப்போது ஓய்வு

எப்போது ஓய்வு

தன்னுடைய ஓய்வு குறித்து பேசிய இவர் ''நான் சீக்கிரம் ஓய்வு பெறுவேன். ஆனால் எப்போது என்று தெரியவில்லை. இளம் வீரர்கள் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்னும் நிறைய கிராண்ட்ஸ்லேம் போட்டிகளில் விளையாடுவேன்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Story first published: Monday, February 5, 2018, 16:34 [IST]
Other articles published on Feb 5, 2018
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற