For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதெல்லாம் எனக்கு ஜூஜூபி!! கோலியின் விக்கெட்டை அசால்ட்டாக வீழ்த்திய 19 வயது ஆஸ்திரேலிய வீரர்

Recommended Video

இந்தியா-ஆஸ்திரேலியா இரண்டாம் நாள் பயிற்சி போட்டி: சிறப்பம்சங்கள்- வீடியோ

சிட்னி : இந்திய அணி சிட்னியில் நான்கு நாள் பயிற்சிப் போட்டியில் ஆடி வருகிறது.

இந்த போட்டியில் ஐந்து இந்திய வீரர்கள் அரைசதம் அடித்தனர். கோலியும் அரைசதம் அடித்தார்.

கோலியை ஆட்டமிழக்கச் செய்தது 19 வயது இளம் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் ஆவார். இவர் ஏற்கனவே, இது போன்ற பயிற்சிப் போட்டியில் மற்றொரு சிறந்த வீரரை ஆட்டமிழக்கச் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

64 ரன்கள் அடித்த கோலி

64 ரன்கள் அடித்த கோலி

இந்த பயிற்சிப் போட்டியில் 19 வயதான ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் ஹார்டி விராட் கோலிக்கு பந்துவீசினார். கோலி அப்போது 64 ரன்கள் அடித்து ஆடி வந்தார். ஹார்டி வீசிய ஒரு பந்தை நேராக அடித்தார் கோலி.

ஆரவாரம் இல்லாமல் கொண்டாட்டம்

பந்து நேராக ஹார்டி வசம் சென்றது. ஹார்டி எளிதாக அதை கேட்ச் பிடித்து அசத்தினார். விராட் கோலி போன்ற உலகின் சிறந்த வீரரை ஆட்டமிழக்கச் செய்து விட்டோம் என்ற எந்த ஆரவாரமும் இல்லாமல் எளிமையாக அந்த விக்கெட் வீழ்ச்சியை கொண்டாடினார்.

4 விக்கெட்கள் வீழ்த்தினார்

4 விக்கெட்கள் வீழ்த்தினார்

ஹார்டி இந்த போட்டியில் 13 ஓவர்கள் வீசி 50 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தினார். கோலி மட்டுமல்லாமல் இந்த போட்டியில் ரோஹித் சர்மாவின் விக்கெட்டையும் வீழ்த்தி ஆச்சரியம் அளித்தார் இந்த வீரர்.

முன்பு ஜோ ரூட் விக்கெட்

முன்பு ஜோ ரூட் விக்கெட்

இவர் இதற்கு முன்பு இங்கிலாந்தின் ஜோ ரூட்டை இதே போல கடந்த ஆண்டு நடந்த பயிற்சிப் போட்டியில் ஆட்டமிழக்கச் செய்து பெயர் பெற்றார். சிறந்த பேட்ஸ்மேன்களான ஜோ ரூட், விராட் கோலி போன்றவர்களின் விக்கெட்டை வீழ்த்தி இப்போதே பெயர் பெற்றுள்ளார் ஹார்டி. இன்னும் சில ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்று கலக்குவார் என எதிர்பார்க்கலாம்.

Story first published: Thursday, November 29, 2018, 18:00 [IST]
Other articles published on Nov 29, 2018
English summary
19 year old Aaron Hardie stunned Virat Kohli by bowled and caught in warm up game in Australia.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X