For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“ரசிகர்களிடம் இருந்து வீரர்களை பாதுகாக்கணும்”னு சொன்ன வீரருக்கு ட்விட்டரில் நோஸ்கட்

Recommended Video

ரசிகர்களிடம் இருந்து வீரர்களை பாதுகாக்கணும்: ஆகாஷ் சோப்ரா கருத்து- வீடியோ

மும்பை : கடந்த சில நாட்களாக, கிரிக்கெட் போட்டிகள் இடையே ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைந்து தங்கள் அபிமான வீரர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவதும், செல்ஃபி எடுப்பதும் என அட்டகாசம் செய்து வருவதாக செய்திகள் வருகின்றன.

ஹைதராபாத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கூட ஒரு ரசிகர் கோலியை வலுகட்டாயமாக அணைத்து செல்ஃபி எடுத்தார். முத்தம் கொடுக்க கூட முயன்றார்.

[கோலியை கட்டி பிடித்து செல்ஃபி.. "உம்மா" கொடுக்கவும் முயற்சி.. ரசிகர் சேட்டை #IndvsWI]

இது வீரர்களுக்கு பாதுகாப்பில்லை என ட்விட்டரில் கூறியுள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா. எனினும், ரசிகர்கள் அவருக்கு எதிராக கருத்து கூறியுள்ளனர்.

வீரர்களை பாதுகாப்பாக வைத்திருங்கள்

ஆகாஷ் சோப்ரா தன் பதிவில், "ஆடுகளத்தின் மையத்திற்கு பல ரசிகர்கள் சென்று விடுகிறார்கள். தயவுசெய்து வீரர்களை பாதுகாப்பாக வைத்திருங்கள்" என கூறி இருக்கிறார்.

ரசிகர்கள் தொந்தரவு

ரசிகர்கள் தொந்தரவு

குறிப்பாக கடந்த நாட்களில், தோனி, கோலி, ரோஹித் சர்மா ஆகியோருடன் செல்ஃபி எடுக்க ரசிகர்கள் ஆடுகளத்திற்குள் எகிறி குதித்து ஓடி வந்தனர். அதிலும் சர்வதேச போட்டியில் இப்படி நடைபெறுவது சற்று அதிகப்படியான விஷயம் தான். ஆனால், சில ரசிகர்கள் இதற்கு மாறாகவும் கூறுகின்றனர்.

ஸ்பெஷல்-லாம் இல்லை

"அவர்களும் நம்மளை மாதிரிதான்.. ஒண்ணும் பெருசா ஸ்பெஷல்-லாம் இல்லை" என கூறி இருக்கிறார் இந்த ரசிகர்.

நீங்க என்ன கடவுளா?

"எப்படி ஒரு வீரர் ரசிகரிடம் இருந்து பாதுகாப்பில்லாமல் இருக்க முடியும்? நீங்கள் என்ன உங்கள் உலகத்தில் கடவுளாக இருக்கிறீர்களா?" என நச்சென்று மூக்கறுப்பது போல கேட்டுள்ளார் இந்த நபர்.

ஆயுதமா இருக்கு?

"கால்பந்தில் இது போல் அடிக்கடி நடக்கும். இது ஒன்றும் கையில் ஆயுதத்தை தூக்கிக் கொண்டு வருவது போன்ற விஷயமில்லை. உங்கள் வீரர்கள் எல்லாம் பாதுகாப்பாக தான் இருக்கிறார்கள். இது ஆட்டத்தின் போக்கை பாதிக்கும் என்பதற்காக இது நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என ஆகாஷ் சோப்ராவுக்கு விளக்கம் அளித்துள்ளார் இவர்.

Story first published: Tuesday, October 16, 2018, 18:58 [IST]
Other articles published on Oct 16, 2018
English summary
Aakash Chopra concerned about pitch invasions and Twitter is not happy about it
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X