போராட்டம்.. ஆசியாவின் மானத்தை காப்பாற்றிய ஆப்கன் அணி.. குவியும் பாராட்டு #AFGvsAUS

World cup 2019 AUS VS AFG | ஆஸ்திரேலியாவின் பௌலிங்கை சமாளித்து ஆப்கானிஸ்தான் போராட்டம்!

பிரிஸ்டல் : ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையே ஆன உலகக்கோப்பை லீக் சுற்றின் நான்காம் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பாராட்டை அள்ளி இருக்கிறது.

2019 உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்-இல் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து ஆடுகளங்கள் வேகப் பந்துவீச்சுக்கு பெயர் போனவை.

அதனால், சுழற்பந்துவீச்சுக்கு ஏற்ற ஆடுகளங்கள் கொண்ட சில போட்டிகளில் ஆசிய அணிகள் தடுமாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை நடந்த நான்கு போட்டிகளில் மூன்று ஆசிய அணிகள் இங்கிலாந்து ஆடுகளங்களை சமாளிக்க முடியாமல் திணறியுள்ளன.

தாக்குப் பிடித்தது

தாக்குப் பிடித்தது

அதில் ஒன்று தான் ஆப்கானிஸ்தான் அணி. ஆனால், ஆப்கானிஸ்தான் அணி, வேகப் பந்துவீச்சில் பலமாக இருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக போராடி ஓரளவு தாக்குப் பிடித்து ரன் குவித்தது.

2 டக் அவுட்

2 டக் அவுட்

முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் இருவரும் டக் அவுட் ஆனார்கள். அதன் பின் வந்த வீரர்களில் ரஹ்மத் ஷா 43, குலாபுதின் நயிப் 31, நஜிபுல்லா 51, ரஷித் கான் 27 ரன்கள் குவித்தனர்.

ஆசிய அணிகளில் அதிகம்

ஆசிய அணிகளில் அதிகம்

ஆப்கானிஸ்தான் அணி 38.2 ஓவர்களில் 207 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பாகிஸ்தான், இலங்கை ஆகிய மற்ற இரண்டு அணிகளைக் காட்டிலும், சிறப்பாகவே பேட்டிங் செய்து அவர்களை விட அதிக ரன்கள் குவித்து ஆசிய கண்டத்தின் மானத்தை காப்பாற்றியுள்ளது. இதற்காக பலரும் ஆப்கானிஸ்தான் அணியை பாராட்டி வருகின்றனர்.

பாகிஸ்தான் மோசம்

பாகிஸ்தான் மோசம்

முன்னதாக, பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து கடும் விமர்சனத்தை சந்தித்தது. அடுத்து இலங்கை அணி, நியூசிலாந்துக்கு எதிராக 136 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அனுபவம் குறைவு

அனுபவம் குறைவு

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் பலமான வேகப் பந்துவீச்சில் இரு துவக்க வீரர்கள் டக் அவுட் ஆன நிலையிலும், ஆப்கானிஸ்தான் அணி போராடி 207 ரன்கள் சேர்த்தது. இத்தனைக்கும், பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளை விட மிகக் குறைந்த அனுபவமும், பயிற்சி வாய்ப்புகளும் கொண்ட அணி ஆப்கானிஸ்தான்.

பாராட்டு மழை

பாராட்டு மழை

பாகிஸ்தான், இலங்கை ரசிகர்கள் உட்பட ஆசிய அணிகளை சேர்ந்த ரசிகர்கள் பலரும் ஆப்கானிஸ்தான் ஆசிய கண்டத்தின் மானத்தை காப்பாற்றியதாக கூறி வருகின்றனர். ஆஸ்திரேலியா எப்படியும் 208 என்ற எளிய இலக்கை எட்டி விடும் என்று தெரிந்தும், போட்டி முடியும் முன்னே ஆப்கானிஸ்தான் அணிக்கு வெற்றி பெற்றது போல பாராட்டுக்கள் வந்து கொண்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
AFG vs AUS Cricket World cup 2019 : Afghanistan showed a decent batting display against Australia
Story first published: Saturday, June 1, 2019, 22:46 [IST]
Other articles published on Jun 1, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X