For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாங்களும் கெத்து தான்.. பாகிஸ்தானை போட்டுத் தாக்கி.. மற்ற டீம்களுக்கு மிரட்டல் விட்ட ஆப்கன்!

பிரிஸ்டல் : 2019 உலகக்கோப்பை தொடர் கடுமையாக இருக்கப் போகிறது என்று சொல்வது போல, வளர்ந்து வரும் ஆப்கானிஸ்தான் அணி, பயிற்சிப் போட்டியில் அசத்தல் வெற்றி பெற்று மற்ற அணிகளுக்கு மிரட்டி இருக்கிறது.

2019 உலகக்கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக நடைபெறும் பயிற்சிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை சந்தித்தது ஆப்கானிஸ்தான் அணி.

AFG vs PAK : 1st warm up match World cup 2019 match report

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 262 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் இமாம் உல் ஹக் 32, பாபர் ஆசாம் 112, ஷோயப் மாலிக் 44 ரன்கள் குவித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

ஆப்கானிஸ்தான் அணியின் முகமது நபி 3, ரஷித் கான் 2, தௌலத் ஸத்ரான் 2, ஹமித் ஹாசன் 1, அப்தாப் ஆலம் 1 விக்கெட் எடுத்தனர். ரஷித் கான் 2 விக்கெட்கள் மட்டுமல்லாது, 9 ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டுமே கொடுத்து அசத்தினார்.

 IND vs NZ Live: செம ஷாக்.. ரோஹித், தவான், கோலி, தோனி.. மொத்தமாக சரிந்த பேட்டிங்.. பெரும் ஏமாற்றம்! IND vs NZ Live: செம ஷாக்.. ரோஹித், தவான், கோலி, தோனி.. மொத்தமாக சரிந்த பேட்டிங்.. பெரும் ஏமாற்றம்!

அடுத்து வந்த ஆப்கன் அணி வீரர்கள் ஹஸ்ரதுல்லா ஜஜாய் 49, ரஹ்மத் ஷா 32, நபி 34 ரன்கள் சேர்த்தனர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹஷ்மதுல்லா ஷாஹிதி கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று, 74 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஆப்கன் அணி 49.3 ஓவர்களில் வெற்றி இலக்கான 263 ரன்களை எட்டியது.

AFG vs PAK : 1st warm up match World cup 2019 match report

பாகிஸ்தான் போன்ற அனுபவம் வாய்ந்த, நல்ல வீரர்கள் கொண்ட அணியை வீழ்த்தியுள்ள ஆப்கானிஸ்தான் அணி, மற்ற அணிகளுக்கு அச்சத்தை உண்டாக்கி இருக்கிறது. நிச்சயம், இந்த வெற்றியை கண்ட இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற பலமான அணிகள், ஆப்கானிஸ்தானை வீழ்த்த தனி திட்டம் தயார் செய்ய முடிவு செய்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Story first published: Saturday, May 25, 2019, 18:08 [IST]
Other articles published on May 25, 2019
English summary
AFG vs PAK : 1st warm up match World cup 2019 match report
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X