For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணி செய்வது பெரும் தவறு.. பாகிஸ்தானுடனான ஆட்டம்.. ரோகித் சர்மா மீது கம்பீர் விளாசல்!

துபாய்: இந்திய அணியில் ரோகித் சர்மாவின் திட்டம் குறித்து முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கடுமையாக விளாசியுள்ளார்.

Recommended Video

Asia Cup-ல் Pakistan தோல்வி! India-வின் வெற்றிக்கான Reasons என்ன | Aanee's Appeal

ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

கடைசி வரை பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் சிக்ஸர் அடித்து ஹர்திக் பாண்ட்யா முடித்துக்கொடுத்தார்.

ஜடேஜாவுக்கு புரோமோஷன் கொடுத்தது சரியா? தவறா?.. 3 காரணங்களால டிராவிட் எடுத்த முடிவுஜடேஜாவுக்கு புரோமோஷன் கொடுத்தது சரியா? தவறா?.. 3 காரணங்களால டிராவிட் எடுத்த முடிவு

இந்திய அணி சொதப்பல்

இந்திய அணி சொதப்பல்

148 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் டாப் 3 விக்கெட்கள் மோசமாக வீழ்ந்தன. கே.எல்.ராகுல் தனது முதல் பந்திலேயே பேட்டை சுழற்றி அவுட்டானார். முகமது நவாஸ் வீசிய பந்தில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி சிக்ஸர் அடிக்க முயன்று ஒரே மாதிரி அவுட்டாகினர். இதனால் 53 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து இந்தியா தடுமாறியது.

 கம்பீர் அதிருப்தி

கம்பீர் அதிருப்தி

இந்நிலையில் இந்திய அணியின் இந்த செயல்பாட்டை கவுதம் கம்பீர் கண்டித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், வீரர்கள் நம்பிக்கையுடன் இருந்தால், உடனே அதிரடி மட்டுமே காட்ட வேண்டும் என்று அர்த்தம் அல்ல. செயல்பாடு என்பது அதிரடி அல்லது கிளாசிக் என்பது கிடையாது. வெற்றி பெற வேண்டும், அது 15 ஓவர்களில் பெற்றால் என்ன? 19 ஒவர்களில் பெற்றால் என்ன?. என்னதான் நாம் திட்டம் போட்டாலும் கள சூழலுக்கு ஏற்ப நடந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

ரோகித் யோசிக்கனும்

ரோகித் யோசிக்கனும்

நன்கு ஸ்விங்க் ஆகும் புதிய பந்தில், அதிரடி காட்ட முயன்றால் 6 ஓவர்களுக்குள் 3 - 4 விக்கெட்களை இழந்து, ஆட்டம் முடிந்துவிடும். டி20 கிரிக்கெட் என்பது அதிரடியாக விளையாட வேண்டும் என்பது தான். ஆனால் வெறும் 148 ரன்கள் தான் தேவை என்ற சூழலில் 5 விக்கெட்களை மோசமாக இழப்பு ஏற்புடையது அல்ல? இதனை ரோகித் சிந்திக்க வேண்டும் என கம்பீர் கூறியுள்ளார்.

வாசீம் அக்ரம் கருத்து

வாசீம் அக்ரம் கருத்து

இதே போன்ற கருத்தை தான் பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசீம் அக்ரமும் கூறியுள்ளார். அதில், இந்திய வீரர்களின் மனநிலை முற்றிலும் மாறிவிட்டது. ஒரு வீரர் 50 பந்துகளில் 60 ரன்களை எடுப்பதை கேப்டன் ரோகித் விரும்பவில்லை. அவர் 25 பந்துகளில் 50 ரன்கள் வேண்டும் என எதிர்பார்க்கிறார். எனினும் சூழலுக்கு ஏற்றவாறு அதனை மாற்றிக்கொள்வது நல்லது என கூறியுள்ளார்.

Story first published: Tuesday, August 30, 2022, 15:38 [IST]
Other articles published on Aug 30, 2022
English summary
Gambhir about team India ( இந்திய அணி குறித்து கவுதம் கம்பீர் பேச்சு ) பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்திய அணியின் ஆட்டம் குறித்து கவுதம் கம்பீர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X