For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசிய கோப்பை: தீபக் சஹாருக்கு காயம்?? இந்திய அணிக்குள் புதிய வீரர் சேர்ப்பு.. குழப்பத்தில் ரசிகர்கள்

அமீரகம்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் திடீரென குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Recommended Video

Vinod Kambli-க்கு கிடைத்த Job Offer! உதவி செய்த Maharasthra Businessman | *Cricket

ஆசிய கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் செப்டம்பர் 11ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது.

இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி துபாய் சென்றடைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆசிய கோப்பை 2022: குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.. கோப்பை அந்த அணிக்கு தான்.. வாட்சன் கணிப்பு ஆசிய கோப்பை 2022: குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.. கோப்பை அந்த அணிக்கு தான்.. வாட்சன் கணிப்பு

வீக்கான பவுலிங்

வீக்கான பவுலிங்

இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் சிறப்பாக இருந்தாலும், பவுலிங்கில் பலவீனமாக இருப்பதாக வல்லுநர்கள் கூறி வருகின்றனர். இதற்கு காரணம் அனுபவமே இல்லாத அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கான் ஆகிய இருவரும் மெயின் பவுலர்களாக களமிறக்கப்படவுள்ளது தான். குறிப்பாக ரன்களை வாரி வழங்கும் ஆவேஷ் கான் எதற்காக சேர்க்கப்பட்டார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

தீபக் சஹாரின் கம்பேக்

தீபக் சஹாரின் கம்பேக்

இதனையடுத்து ஆவேஷ் கானுக்கு மாற்றாக தீபக் சஹார் கொண்டு வரப்படலாம் என தகவல் வெளியானது. காயத்தில் இருந்து மீண்டு வந்த தீபக் சஹார் ஜிம்பாப்வே தொடரில் சிறப்பாக செயல்பட்டதை அடுத்து, அவர் மெயின் அணிக்கு கொண்டு வரப்படுவார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் திடீரென அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும், இதனால் மெயின் அணியில் சேர்க்கப்படவில்லை எனவும் தகவல் வெளியானது.

தேர்வுக்குழுவின் விளக்கம்

தேர்வுக்குழுவின் விளக்கம்

இந்நிலையில் தீபக் சஹாருக்கு ஒன்றும் ஆகவில்லை என தேர்வுக்குழு கூறியுள்ளது. இதுகுறித்து பேசிய அதிகாரி ஒருவர், " இது சுத்த முட்டாள்தனம. தீபக் சஹார் இந்திய அணியுடன் துபாயில் இருக்கிறார். அவர் நன்றாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதனால் தவறான தகவலை யாரும் பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

 புதிய வீரருக்கு வாய்ப்பு

புதிய வீரருக்கு வாய்ப்பு

இதுஒருபுறம் இருக்க, இளம் வீரர் குல்தீப் சென் திடீரென இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் வலைப்பயிற்சி பவுலராக சேர்க்கப்பட்டிருக்கிறார். தீபக் சஹார் நன்றாக உள்ள போது, எதற்காக புதிய வீரரை திடீரென கொண்டு வர வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. கடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக அறிமுகமான குல்தீப் சென் 8 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். எனவே இவர் தீபக் சஹாருக்கு மாற்றாக தான் குல்தீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனத்தெரிகிறது.

Story first published: Thursday, August 25, 2022, 19:59 [IST]
Other articles published on Aug 25, 2022
English summary
Kuldeep sen in asia cup 2022 ( ஆசிய கோப்பை தொடரில் குல்தீப் சென் சேர்ப்பு ) ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய வீரராக குல்தீப் சென் சேர்க்கப்பட்டுள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X