For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி மீது பி.சி.சி.ஐ.யிடம் அஸ்வின் புகார்?.. கோலி கேப்டன் பதவி விலக இதுதான் காரணமா?.. பரபர தகவல்!

டெல்லி: நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் மீண்டும் தொடங்கி சூடுபிடித்து வருகிறது. இந்த தொடர் முடிந்த உடன் டி20 உலகக்கோப்பை நடக்க இருக்கிறது. இந்த நிலையில் இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அளித்தார் இந்திய கேப்டன் விராட் கோலி.

டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டனாக இருப்பது மிகவும் நெருக்கடியாக இருப்பதால், டி20 உலகக்கோப்பை முடிந்தவுடன் டி20 அணி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக கடந்த வாரம் கோலி அறிவித்தார்.

 மெகா சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி.. ஜஸ்ட் 71 ரன்கள் மட்டும் தேவை மெகா சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி.. ஜஸ்ட் 71 ரன்கள் மட்டும் தேவை

கேப்டன் விராட் கோலி

கேப்டன் விராட் கோலி

இதேபோல் இந்த ஐ.பி.எல் சீசன் முடிந்தவுடன், பெங்களுரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக போகதாவும் கோலி அறிவித்தார். கோலியின் இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதற்கு பின்னால் பல்வேறு கருத்துக்களும் உலா வந்தன. டி20 உலக்கோப்பைக்கு இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் தோனி நியமிப்பட்டுள்ளார். இந்த உலககோப்பைக்கு பிறகும் தோனி ஆலோசகராக இருந்தால், அவருக்கும் நமக்கும் ஒத்து வராது என்று கருதியே கோலி டி20 கேப்டன் பொறுப்பை துறப்பதாக தகவல்கள் கூறின.

அஸ்வின் புகார்

அஸ்வின் புகார்

மேலும் பேட்டிங்கில் கவனம் செலுத்தும் பொருட்டு இந்திய கிரிக்கெட் வாரியமே அவரை வற்புறுத்தி கேப்டன் பதவியை விலக வைத்ததாக ஒரு சில தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் கோலி குறித்து அஸ்வின் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் புகார் கொடுத்து விட்டதாகவும் அதன் காரணமாக கோலியை கேப்டன் பதவியில் விலக கிரிக்கெட் வாரியம் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் கோலி சரியாக வழிநடத்தவில்லை என்று அஸ்வின் பி.சி.சி.ஐ ஜெய் ஷாவிடம் புகார் கொடுத்ததாக தகவல்கள் கூறுகின்றன..

இங்கிலாந்து தொடர்

இங்கிலாந்து தொடர்

இதனை தொடர்ந்து இங்கிலாந்து எதிரான 4 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த அஸ்வின், டிரஸ்சிங் ரூமில் உட்காராமல், மைதானத்தில் தனியாக உட்கார்ந்து இருந்தார். இது தொடர்பாகவும், கோலி மீது அஸ்வின் புகார் கொடுத்தது உண்மை எனவும் முடிச்சு போட்டு செய்திகள் பரவின. இதேபோல் புஜாரா மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகிய இருவரும் கோலிக்கு எதிராக புகார் அளிக்க ஜெய் ஷாவை தனிப்பட்ட முறையில் சந்தித்ததாக் கூறப்படுகிறது.

Recommended Video

Ashwin's Revenge on Morgan after Fight with Southee | IPL 2021 KKR vs DC | OneIndia Tamil
உண்மை இல்லை

உண்மை இல்லை

இதேபோல் விராட் கோலி டி 20 உலகக் கோப்பை அணியில் அஷ்வினுக்கு பதிலாக ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹலை எடுக்க,விரும்பினார் என்றும் ஆனால் கிரிக்கெட் வாரியம் இதனை நிராகரித்து விட்டதால் கோலி கடும் அதிருப்தியில் இருக்கிறார் எனவும் தகவல்கள் பரவுகின்றன. ஆனால் மேற்கண்ட இந்த தகவலில் உண்மை இல்லை என்று கிரிக்கெட் விமர்சர்கள், ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Story first published: Thursday, September 30, 2021, 14:26 [IST]
Other articles published on Sep 30, 2021
English summary
According to reports, Aswin has lodged a complaint with the BCCI against Kohli and this is the reason for the resignation of the captain
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X