For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த ஐடியா போதும்..!! ஆஸி.யை ஓட, ஓட விரட்டலாம்…!! இந்தியாவை அலர்ட் செய்யும் கிரிக்கெட் வல்லுநர்கள்

லண்டன்:ஆஸி. அணியின் ஆக்ரோஷ பந்துவீச்சை இந்திய வீரர்கள் எந்த அளவுக்கு சிறப்பாக கையாளுகிறார்களோ... அதை பொறுத்து தான் இன்றைய ஆட்டம் இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்திருக்கின்றனர்.

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் ஞாயிற்றுக் கிழமை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் 14வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, முன்னாள் சாம்பியனான இந்திய அணியை எதிர்கொள்கிறது. இந்த உலக கோப்பை தொடரில் இந்த போட்டி மிக முக்கிய போட்டியாகும்.

ஏன் என்றால்.... பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா தொடக்க லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், அடுத்த ஆட்டத்தில் 15 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசையும் வீழ்த்தி வலுவான நிலையில் உள்ளது. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் சரிவில் இருந்து மீண்டு வந்து ஆஸ்திரேலியா அசத்தியது... அவசியம் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று.

தொடர் வெற்றி

தொடர் வெற்றி

கடந்த ஆண்டு பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய பிறகு தடுமாறிய ஆஸ்திரேலியா, சில மாதங்களாக ஒருங்கிணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. வார்னர், சுமித் அணிக்கு திரும்பி இருப்பது 5 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை மேலும் பலப்படுத்தி, அடுத்த கட்டத்தில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது. அதாவது.. ஆஸ்திரேலியா தனது கடைசி 10 ஒரு நாள் போட்டிகளில் தோல்வியே சந்திக்காத அணியாக இருக்கிறது.

எளிதில் கணிக்க முடியாது

எளிதில் கணிக்க முடியாது

பவுலிங், பேட்டிங்கில் எந்த அணிக்கும் சவால்விடும் ஆஸ்திரேலியா, இந்திய அணியை அவ்வளவு சாதாரணமாக எடை போடாது. கடந்த மார்ச் மாதம் நடந்த இந்திய பயணத்தில் ஆஸ்திரேலிய அணி ஒரு நாள் போட்டி தொடரை 3-2 என்ற கணக்கில் தனதாக்கியது.

ஆஸி. தயார்

ஆஸி. தயார்

அந்த தொடரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தி பந்து வீசும் யுஸ்வேந்திர சாஹல், குல்தீல் யாதவ் ஆகியோரின் மாயாஜால பந்து வீச்சை திறம்பட சமாளித்தனர். அந்த வெற்றி தங்களது நம்பிக்கையை அதிகப்படுத்தி இருப்பதாக அந்த அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆக... ஆஸ்திரேலியா முழு அளவில் தயார் நிலையில் இருக்கிறது.

பேட்ஸ்மென்கள் ஜொலிப்பார்களா?

பேட்ஸ்மென்கள் ஜொலிப்பார்களா?

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, பயிற்சி ஆட்டத்தில் லேசாக தடுமாறினாலும், முதலாவது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை சாய்த்தது. அந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா 122 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். மற்ற பேட்ஸ் மேன்கள் பெரிய அளவில் ஜொலிக்க வில்லை. பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.

என்ன வியூகங்கள்?

என்ன வியூகங்கள்?

இந்திய அணி வகுத்திருக்கும் வியூகங்கள் போல... ஆஸி.யும் வியூகங்களை வகுத்து இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியினர் ஷாட் பிட்ச் வகை பந்து வீச்சு மூலம் இந்திய பேட்ஸ்மேன்களை காலி செய்ய முயற்சிப்பர். ஸ்டார்க், கம்மின்ஸ் உள்ளிட்டோரின் ஆக்ரோஷமான வேகப்பந்து வீச்சை நமது வீரர்கள் எந்த அளவுக்கு சிறப்பாக கையாளுகிறார்களோ? அதற்கு தகுந்தபடியே ஆட்டத்தின் போக்கு அமையும்.

மழைக்கு வாய்ப்பு

மழைக்கு வாய்ப்பு

இரு அணிகளும் தங்களது வெற்றிப்பயணத்தை தொடர மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. வானிலையும் இந்த போட்டியில் முக்கியத் துவம் வாய்ந்த ஒன்று. லேசாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்றபடி வெயில் அடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த போட்டி தொடரில் ஓவல் மைதானத்தில் சேசிங் செய்வது கடினம். எனவே டாஸ் முக்கிய பங்கு வகிக்கும்.

Story first published: Sunday, June 9, 2019, 13:08 [IST]
Other articles published on Jun 9, 2019
English summary
Australia plan to get early wickets and attack Indian batsmans throughout bowling.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X