For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வங்கதேச கிரிக்கெட் கேப்டன் தேர்தலில் மாபெரும் வெற்றி.. அரசியல் ஆட்டத்திலும் கலக்கல்

தாகா : வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் மஷ்ராபே மொர்டாசா வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பியாக தேர்வாகி உள்ளார்.

தற்போது கிரிக்கெட் ஆடி வரும் அவர், அரசியலிலும் குதித்து, பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொர்டாசா தேர்தலில் போட்டியிட்டார்

மொர்டாசா தேர்தலில் போட்டியிட்டார்

வங்கதேச நாட்டின் ஆளுங்கட்சியான அவாமி லீக் கட்சியில் சேர்ந்து, தேர்தலை சந்தித்தார் மொர்டாசா. நாராயில் என்ற தொகுதியில் போட்டியிட்ட மொர்டாசா, எதிர் கட்சி போட்டியாளரை வீழ்த்தி பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பெற்ற வாக்குகள் எத்தனை?

பெற்ற வாக்குகள் எத்தனை?

மொர்டாசா 2,74,418 வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களில் ஒருவர் கூட பத்தாயிரம் ஓட்டுக்களை தாண்டி வாக்குகள் பெறவில்லை. இரண்டாம் இடம் பிடித்த பார்ஹாத் என்பவர் 8,006 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

உலகக்கோப்பை வரை ஆடுவார்

உலகக்கோப்பை வரை ஆடுவார்

2019 உலகக்கோப்பை வரை மட்டுமே மொர்டாசா ஆட உள்ளார் என கூறப்படுகிறது. தற்போது 35 வயதாகும் மொர்டாசா, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனக்கு மக்கள் சேவை அளிக்க கொடுத்த வாய்ப்பை ஏற்று அரசியலில் இறங்கியதாக கூறியுள்ளார்.

மாபெரும் வெற்றி

மாபெரும் வெற்றி

வங்கதேசத்தில் மொத்தம் உள்ள 300 தொகுதிகளில், 299 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது, இதில் மொர்டாசா இணைந்துள்ள அவாமி லீக் கட்சி 288 இடங்களை வென்று மிகப் பெரிய வெற்றியை ஈட்டியுள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனா நான்காவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளார்.

Story first published: Monday, December 31, 2018, 14:19 [IST]
Other articles published on Dec 31, 2018
English summary
Bangladesh cricket captain Mashrafe Mortaza elected as MP in Bangladesh election
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X