For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடுத்த 2 மாதம் இந்திய ரசிகர்களுக்கு மஜா.. 3 பெரும் அணிகளுடன் போட்டிகள் உறுதி.. அட்டவணை வெளியீடு!

மும்பை: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி வரை சென்று தோல்வியடைந்த இந்திய அணி, அதன்பின்னர் நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் வங்கதேச தொடர்களில் பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1 - 0 என தோற்றது. தற்போது வங்கதேசத்துடனான 3 போட்டிகள் கொண்ட தொடரிலும் 2 தோல்விகளை சந்தித்து ஏமாற்றியிருக்கிறது.

இதனால் அடுத்து வரும் தொடர்கள் இந்தியாவிலேயே நடக்கவிருப்பதால், அதிலாவது வெற்றி பெறுமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரர்.. 34 போட்டிகளில் ஸ்ரேயாஸ் படைத்த சாதனை.. என்ன தெரியுமா? இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரர்.. 34 போட்டிகளில் ஸ்ரேயாஸ் படைத்த சாதனை.. என்ன தெரியுமா?

அட்டவணை வெளியீடு

அட்டவணை வெளியீடு

இந்நிலையில் அதற்கான அட்டவணையை தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய அணி அடுத்ததாக இலங்கையுடன் மோதவுள்ளது. இந்தியாவுக்கு வரும் இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதவுள்ளது. இதில் டி20 தொடர் ஜனவர் 3, 5, 7ம் தேதிகளிலும், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் ஜனவரி 10, 12, 15ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

நியூசிலாந்துடனான தொடர்

நியூசிலாந்துடனான தொடர்

இதனை தொடர்ந்து நியூசிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. ஒருநாள் போட்டிகள் ஜனவரி 18, 21, 24ம் தேதிகளிலும், டி20 தொடர் ஜனவரி 27, 29, ஃபிப்ரவரி 1ம் தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ராஜ்பூரில் முதல்முறையாக சர்வதேச போட்டிகள் நடைபெறவிருப்பது தான்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்

இதன் பின்னர் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வரவுள்ளது. 5 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகளும் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் மோதவுள்ளன. கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 - 2 என இந்தியா வெற்றி கண்டது. இதன்பின்னர் தற்போது தான் இரு அணிகளும் மோதுகின்றன. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இது இருக்கும்.

உலகக்கோப்பை திட்டங்கள்

உலகக்கோப்பை திட்டங்கள்

2023ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் தான் நடைபெறவுள்ளது. இது நவம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடர்களை பயன்படுத்தி, சொந்த மண்ணிலாவது கோப்பையை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Story first published: Thursday, December 8, 2022, 17:59 [IST]
Other articles published on Dec 8, 2022
English summary
BCCI Released the Team India Schedule for Home series against 3 nations, here is the full details
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X