For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த டீம் கூடலாம் கிரிக்கெட் ஆட முடியாது.. டி20 தொடரில் டீமையே மாற்றிய “பிக் பாஸ்”பிசிசிஐ!

மும்பை : 2020 ஜனவரி மாதம் நடைபெற இருந்த இந்தியா - ஜிம்பாப்வே டி20 தொடருக்கு பதிலாக இந்தியா - இலங்கை டி20 தொடர் நடைபெற உள்ளது.

ஆம், ஒரு அணியையே மாற்றி டி20 தொடரை நடத்த உள்ளது பிசிசிஐ. அதற்கான காரணம் இது தான்.

ஜிம்பாப்வே அணியை தான் நடத்தும் தொடர்களில் ஆட தடை விதித்துள்ளது ஐசிசி.

ஜிம்பாப்வே சிக்கல்

ஜிம்பாப்வே சிக்கல்

ஜிம்பாப்வே நாட்டு கிரிக்கெட் போர்டு விவகாரங்களில் அந்த நாட்டின் அரசு தலையிடுவதாகக் கூறி ஐசிசி ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு தடை விதித்தது. அதன்படி, அந்த அணி சில மாதங்களுக்கு ஐசிசி நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

வங்கதேசம் செய்த உதவி

வங்கதேசம் செய்த உதவி

ஐசிசி நடத்தும் தொடர்களில் தான் தடை என்ற நிலையில், வங்கதேசம் அணி தன் நாட்டில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடரில், ஜிம்பாப்வே அணியையும் இணைத்து முத்தரப்பு டி20 தொடரை நடத்தியது.

பிசிசிஐ முடிவு

பிசிசிஐ முடிவு

இதனிடையே, இந்தியா - ஜிம்பாப்வே டி20 கிரிக்கெட் தொடர் ஜனவரியில் நடக்க இருந்தது. ஜிம்பாப்வே அணிக்கு ஐசிசி தடை இருக்கும் நிலையில், இந்தியா அந்த தொடரை மாற்றி அமைத்துள்ளது. ஜிம்பாவே அணிக்கு பதிலாக இலங்கை அணி அந்த தொடரில் பங்கேற்க உள்ளது.

இலங்கைக்கு அழைப்பு

இலங்கைக்கு அழைப்பு

பிசிசிஐ அழைப்பை ஏற்றுள்ள இலங்கை அணி ஜனவரி மாதம் இந்தியா வர உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட தொடராக இந்த டி20 தொடர் நடைபெறும். ஜனவரி 5, 7 மற்றும் 10 தேதிகளில் போட்டிகள் நடைபெறும்.

Story first published: Wednesday, September 25, 2019, 20:57 [IST]
Other articles published on Sep 25, 2019
English summary
BCCI invite Sri Lanka for T20 series after ICC suspended Zimbabwe from participating ICC events. Sri Lanka will play a three match T20 series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X