For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பார்முக்கு திரும்பினார் புவனேஸ்வர் குமார்

பெங்களூரு: காயத்தில் இருந்து மீண்டு வந்த புவனேஸ்வர் குமார் தென்னாபிரிக்கா ஏ அணிக்கெதிரான போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்திய அணியின் முன்னணி வேகபந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் இங்கிலாந்து தொடரின் போது முதுகுவலி காரணமாக அவதிப்பட்டார். அதன் விளைவாக அவர் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் இடம்பெறவில்லை. நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிகளுக்கான அணியிலும் அவரது பெயர் இடம்பெறவில்லை.

bhuvneshwar kumar odi cricket

இந்நிலையில் நான்கு வார ஓய்வுக்கு பிறகு அவர் உடல்தகுதி பெற்றுவிட்டதாக பிசிசிஐ ட்விட்டரில் தெரிவித்தது.மேலும் அவர் தென்னாபிரிக்கா ஏ அணிக்கெதிரான ஒருநாள் போட்டியிலும் பங்கேற்பார் என்று அறிவித்தது.

நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய ஏ அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் மூன்றாமிடம் பிடித்தது. இந்திய ஏ அணி தரப்பில் புவனேஸ்வர் குமார் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

இங்கிலாந்து தொடரில் காயமடைந்த அவர் உடல் தகுதி பெற்றுள்ளது அடுத்து வரும் ஆசிய கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.






Story first published: Thursday, August 30, 2018, 17:02 [IST]
Other articles published on Aug 30, 2018
English summary
bhuvaneshwar kumar hits form again after 4 weeks og rehabilitation
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X