மார்க் மை வேர்ட்ஸ்.. சூர்யகுமார் பற்றி ஜாம்பவான் பிரட் லீ கூறியுள்ள விஷயம்.. அடேங்கப்பா அது நடக்குமா

மும்பை: இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் செய்யப்போகும் விஷயம் குறித்து பிரட் லீ கூறியுள்ள விஷயம் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

இந்திய அணி கடைசியாக தோனி தலைமையில் 2013ம் ஆண்டு ஐசிசி கோப்பையை வென்றிருந்தது. அதன்பின்னர் கோப்பையை வெல்வது என்பது இந்திய ரசிகர்களுக்கு கனவாகவே உள்ளது. விராட் கோலிக்கும், கோப்பைக்கும் ராசியே இல்லாதது போன்று மாறிவிட்டது.

இதன் பின்னர் ரோகித்தின் கைகளுக்கு சென்ற இந்திய அணி, சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பையில் அரையிறுதி வரை சென்று ஏமாற்றத்துடன் வெளியேறியுள்ளது.

ஷாக் மேல் ஷாக்.. தொடர்ந்து 2வது முறையாக.. குரூப் சுற்றோடு வீட்டிற்கு அனுப்பப்பட்ட ஜெர்மனி! ஷாக் மேல் ஷாக்.. தொடர்ந்து 2வது முறையாக.. குரூப் சுற்றோடு வீட்டிற்கு அனுப்பப்பட்ட ஜெர்மனி!

இந்தியாவின் திட்டம்

இந்தியாவின் திட்டம்

2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை எடுத்துக்கொண்டால் இந்திய அணியில் ரோகித், விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் இல்லாமல், ஹர்திக் தலைமையில் புதிய படை உருவாகியுள்ளது. ஒருபுறம் சுப்மன் கில், ருதுராஜ் கெயிக்வாட், உம்ரான் மாலிக் என இளம் வீரர்கள், மற்றொருபுறம் பாண்ட்யா, கே.எல்.ராகுல் போன்ற அனுபவ வீரர்கள் என புதுப்பொழிவு பெறவுள்ளது.

பிரட் லீ பேச்சு

பிரட் லீ பேச்சு

இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் வீரர் பிரட் லீ கூறியுள்ளார். அதில், சூர்யகுமார் யாதவ் இல்லாமல் இந்தியாவால் உலகக்கோப்பை வெல்லவே முடியாது. 12 - 15 மாதங்களுக்குள் அவர் காட்டிய ஆட்டம் பிரமிப்பை ஏற்படுத்தியது. அதுவும் ஆஸ்திரேலிய போன்ற கடினமான களத்தில் அவர் எந்தவித பயமும் இல்லாமல் ஷாட்களை தேர்வு செய்த விதம் கிராண்ட் மாஸ்டர் போல இருந்தது.

ஒரே ஒரு அட்வைஸ்

ஒரே ஒரு அட்வைஸ்

கடினமான ஷாட்களை ஆடும் போதும், சூர்யகுமார் யாதவின் முகத்தில் பதற்றம் இல்லாமல் சிரிப்பு மட்டுமே இருக்கும். அது விலைமதிப்பற்றது. அவர் இந்தியாவுக்காக அதிக ரன்களை அடிப்பவர் மட்டுமல்ல, கோப்பையையும் வென்றுக்கொடுப்பவராக வருவார். அவருக்கு நான் கொடுக்கும் அட்வைஸ் என்னவென்றால், எந்த அட்வைஸையும் கேட்காதீர்கள். தற்போது போகும் வழியிலேயே சிறப்பாக செல்லுங்கள் என பிரட் லீ குறிப்பிட்டுள்ளார்.

டிராவிட்டிற்கு கோரிக்கை

டிராவிட்டிற்கு கோரிக்கை

தொடர்ந்து பேசிய அவர், சூர்யகுமாரின் அடிப்படை முதலில் சிறப்பாக உள்ளதால் தான் இதுபோன்ற ஷாட்களை ஆட முடிகிறது. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் சூர்யகுமாரை நம்பி, அவரின் போக்கிலேயே விட்டுவிட வேண்டும். அப்போது தான் சிறப்பாக இருப்பார் என பிரட் லீ பேசியுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Brett Lee makes a interesting statement about suryakumar yadav for the Team India's future
Story first published: Friday, December 2, 2022, 10:12 [IST]
Other articles published on Dec 2, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X