For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோஹித், கோலி பேட்டிங் செய்வதை பார்க்க வீடியோ கேம்ல ஆடுற மாதிரி இருக்கு.. சாஹல் கலகல

Recommended Video

ரோஹித் சர்மா மற்றும் கோஹ்லி பேட்டிங் பற்றி சாஹல் கலகல பேச்சு

கவுஹாத்தி : இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பெரிய இலக்கை எளிதாக சேஸ் செய்து வென்றது.

இந்த போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 322 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 42.1 ஓவரில் பெரிய இலக்கை எளிதாக எட்டியது.

ரோஹித் சர்மா, விராட் கோலி இணைந்து 246 ரன்கள் குவித்தனர். இருவரும் நீண்ட நேரம் களத்தில் நின்று ஆடினர். அவர்களை வெளியேற்ற முடியாமல் திணறியது வெஸ்ட் இண்டீஸ். இதை பற்றி சாஹல் தன் கருத்தை கூறியுள்ளார்.

ப்ளேஸ்டேஷனில் ஆடுகிறார்கள்

ப்ளேஸ்டேஷனில் ஆடுகிறார்கள்

"ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் இந்த போட்டியின் தலைவர்கள். அவர்கள் இருவரும் பேட்டிங் செய்வதை பார்த்தால் ப்ளேஸ்டேஷனில் (PS4) அவர்கள் விளையாடுவதை போலவே இருக்கிறது" என கூறி உள்ளார் இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர் சாஹல்.

எளிதாக ரன் குவித்த கோலி, ரோஹித்

எளிதாக ரன் குவித்த கோலி, ரோஹித்

ரோஹித் சர்மா, கோலி இருவரும் எந்த தடுமாற்றமும் இன்றி எளிதாக ரன் குவித்தனர். முதலில் கோலி அதிரடியாக ஆடி சதம் அடிக்க, ரோஹித் முதலில் நிதான ஆட்டம் ஆடி பின்னர் அதிரடிக்கு மாறினார். வீடியோ கேம்களில் தான் இப்படி ஆட்டமிழக்காமல் ரன் குவிக்க முடியும் என்பதை தான் சாஹல் சுட்டிக் காட்டுகிறார்.

சாஹல் நல்ல பந்துவீச்சு

சாஹல் நல்ல பந்துவீச்சு

இந்த போட்டியில் சாஹல் பந்துவீச்சில் முக்கிய பங்கு வகித்தார். ஷமி, ஜடேஜா ஆகியோர் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்த நிலையில், சாஹல் கட்டுக்கோப்பாக பந்து வீசி தன் 10 ஓவர்களில் 41 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

சாதனை செய்த ரோஹித்

சாதனை செய்த ரோஹித்

முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா 152 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 150 ரன்களை தாண்டி ரன் குவிப்பது ஆறாவது முறையாகும். ஒருநாள் போட்டிகளில் சச்சின் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் 5 முறை 150 ரன்களுக்கும் மேல் ரன் குவித்து உள்ளனர். இந்த சாதனையை முறியடித்தார் ரோஹித்.

Story first published: Tuesday, October 23, 2018, 12:34 [IST]
Other articles published on Oct 23, 2018
English summary
Chahal says its like watching Playstation when Rohit and Kohli bats
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X