For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எங்க தோனி இல்லாதது தான் பிரச்சனை.. இப்பயாவது புரிஞ்சுக்கங்க.. புலம்பும் ரசிகர்கள்

Recommended Video

ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி எதிரொலி, தோனி ரசிகர்கள் விமர்சனம்- வீடியோ

பிரிஸ்பேன் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்தியா கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலை வரை சென்று தோல்வி அடைந்தது.

இந்த நிலையில், இந்திய அணியில் வீரர்கள் செய்த தவறுகளை சுட்டிக் காட்டி தோனி போன்ற ஒரு அனுபவ வீரரை நாம் இழந்து விட்டோம் என ரசிகர்கள் தங்கள் வேதனையை இணையத்தில் கொட்டித் தீர்த்தார்கள். தோனி ஆடாததால் என்ன பின்னடைவு ஏற்பட்டது?

தோனி ஏன் நீக்கப்பட்டார்?

தோனி ஏன் நீக்கப்பட்டார்?

2020 டி20 உலகக்கோப்பைக்கு முன் இந்திய டி20 அணியில் சரியான விக்கெட் கீப்பரை அடையாளம் காண வேண்டும் என்ற நோக்கில் தோனி அணியில் இருந்து நீக்கப்பட்டார். இது தற்காலிகமான நீக்கம் என கோலி கூறினாலும், தோனியின் டி20 அணிக்கான கதவு கிட்டத்தட்ட மூடிவிட்டது என்றே பலரும் இதை எடுத்துக் கொண்டனர்.

தோனி வழியில் சென்ற ரோஹித்

தோனி வழியில் சென்ற ரோஹித்

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய டி20 தொடர்களில் தோனி இடம் பெறவில்லை. வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரின் இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா. அவர் தோனியின் பாதையை கேப்டன் பதவியில் பின்பற்றுபவர். கேப்டன் பதவியில் இருந்தாலும் போட்டிகளின் போது எந்த சூழ்நிலையிலும் தோனி போல அமைதியான மனநிலையில் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்தியா வென்றது. தோனி இல்லாவிட்டாலும் அவரின் வழியில் சென்ற ரோஹித் வெற்றி தேடிக் கொடுத்தார். மேலும், இந்தியா சொந்த மண்ணில் ஆடுகிறது என்ற சாதகமான சூழ்நிலையும் ஒரு காரணம். தோனியின் இழப்பை நாம் இந்தியாவில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பெரிதாக உணரவில்லை.

ஆஸ்திரேலியாவில் கேப்டன் கோலி

ஆஸ்திரேலிய டி20 தொடரில் விராட் கோலி கேப்டன். இவரது தலைமை முதிர்ச்சி பெற்றதாக இல்லை என பலரும் கூறி விட்டனர். அதே போல அணித் தேர்வில் இருந்து பந்துவீச்சு சுழற்சி வரை அனைத்திலும் மீண்டும் ஒரு முறை சொதப்பினார் கோலி. இது, ஒரு வேளை தோனி கோலிக்கு அருகே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

தோனிக்கு மாற்று வீரர்கள் யார்?

தோனிக்கு மாற்று வீரர்கள் யார்?

அடுத்து தோனிக்கு மாற்றாக அணியில் இருவரை எடுத்துள்ளார்கள். அவர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட். இதில் தினேஷ் கார்த்திக் மூத்த வீரர். (தோனிக்கும் இவர் மூத்த வீரர் என்பது பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.) மற்றொருவர், இளம் வீரர் ரிஷப் பண்ட்.

ரிஷப் சொதப்பல் ஷாட்

நேற்று போட்டியின் ஒரு கட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட்கள் இழந்து தவித்தபோது இவர்கள் இருவரும் 3.5 ஓவர்களில் 51 ரன்கள் சேர்த்து அணியை மீட்டனர். ஆனால், ரிஷப் பண்ட் தேவையற்ற ஷாட் ஆடி அவுட்டானார். சிலர் தோனி இது போன்ற சமயங்களில் பொறுப்பாக ஆடுவார் என கூறி இருந்தனர்.

யோசனை இல்லாத தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக் 12 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு அணியை அழைத்துச் சென்றார். ஆனால், கடைசி ஓவரின் முதல் பந்தில் இரண்டு ரன்கள் ஓடி க்ருனால் பண்டியாவுக்கே மீண்டும் பேட்டிங் ஸ்ட்ரைக்கை கொடுத்தார். தோனியாக இருந்தால் இந்த தவறை செய்திருக்க மாட்டார் என சில ரசிகர்கள் இணையத்தில் கூறி இருந்தனர்.

ஆக மொத்தத்தில் தோனி இல்லாதது அணியில் பின்னடைவு என்ற பேச்சு வளர்ந்து வருகிறது.

Story first published: Thursday, November 22, 2018, 12:03 [IST]
Other articles published on Nov 22, 2018
English summary
Cricket fans on missing Dhoni in Australia T20 as India lost First T20 match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X