For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி கிளவுஸ் விதிமீறல்.. அனுமதி மறுத்த ஐசிசி.. கொந்தளித்த ரசிகர்கள்.. அடுத்து என்ன?

லண்டன் : தோனியின் ராணுவ முத்திரை பதித்த கிளவுஸ் அணிய ஐசிசி அனுமதி மறுத்து, பிசிசிஐக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதிய உலகக்கோப்பை லீக் போட்டியில் தோனி ராணுவ முத்திரை பதித்த விக்கெட் கீப்பிங் கிளவுஸ் அணிந்து விளையாடினார். இது இந்திய ரசிகர்கள் மத்தியில் பரவியது.

பலரும் தோனியின் நாட்டுப்பற்றை புகழ்ந்து பேசினர். பின்னர், ஐசிசி ராணுவ முத்திரை பதித்த தோனியின் கிளவுசை அடுத்த போட்டியில் மாற்றி விடுமாறு கோரி, பிசிசிஐயிடம் கேட்டுக் கொண்டது ஐசிசி.

ஆதரவுக் குரல்கள்

ஆதரவுக் குரல்கள்

அது ரசிகர்களை கோபமடையச் செய்தது. "DhoniKeepTheGlove" என்ற பெயரில் ட்விட்டரில் தோனிக்கு ஆதரவுக் குரல்கள் எழுந்தன. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தோனிக்கு ஆதரவாக கருத்து கூறி வந்தனர். ஐசிசி, தோனியின் கிளவுஸை அனுமதிக்க வேண்டும் கூறினர்.

அனுமதி கடிதம்

அனுமதி கடிதம்

இதற்கிடையே, தோனியின் ராணுவ முத்திரை கொண்ட கிளவுஸுக்கு அனுமதி கோரி பிசிசிஐ, ஐசிசிக்கு கடிதம் எழுதியது. இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர், பிசிசிஐ தோனிக்கு ஆதரவாக நின்று, ஐசிசியிடம் அனுமதி பெற வேண்டும் என கூறி மேலும் அழுத்தம் கொடுத்தார்.

அனுமதி இல்லை

அனுமதி இல்லை

எனினும், ஐசிசி விதிப்படி அனுமதி கிடைக்காது என்றே பலரும் கூறினர். அதே போல, ஐசிசி, பிசிசிஐக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், தோனி முந்தைய போட்டியில் பயன்படுத்திய குறிப்பிட்ட முத்திரை பதித்த விக்கெட் கீப்பிங் கிளவுஸை அனுமதிக்க முடியாது என கூறியுள்ளது.

விதிமீறல்

விதிமீறல்

மேலும், ஐசிசி விதிகளின்படி உடை அல்லது உபகரணங்களில், தனிப்பட்ட நபரின் செய்தி அல்லது முத்திரைகளை அனுமதிக்க முடியாது. இதோடு, அந்த முத்திரை விக்கெட் கீப்பர் கிளவுஸில் எவற்றை பயன்படுத்தலாம் என்ற விதியையும் மீறியுள்ளது என பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளது ஐசிசி.

அது தவறா?

அது தவறா?

ஐசிசியின் இந்த அறிவிப்பு இந்திய ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. ஐசிசி அநியாயம் செய்து விட்டது என இணையத்தில் புலம்பியும், திட்டியும் வருகிறார்கள் இந்திய ரசிகர்கள். பாரா மிலிட்டரி படைப் பிரிவில் லெப்டினன்ட் கலோனலாக இருக்கும் தோனி தன் நாட்டுப்பற்றை வெளிப்படுத்த, ராணுவ முத்திரையை பயன்படுத்தினார். அது தவறா? என் கேட்டு பொங்கி வருகின்றனர்.

பாகிஸ்தான் எதிர்ப்பு

பாகிஸ்தான் எதிர்ப்பு

ஒருவேளை, ஐசிசி குறிப்பிட்ட கிளவுஸை அணிய அனுமதி கொடுத்திருந்தால், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு நிச்சயம் இந்த விஷயத்தை எதிர்த்து இருக்கும். எனவே, ஐசிசி விதிகளின்படி முடிவெடுத்துள்ளது.

ரசிகர்கள் கோபம்

ரசிகர்கள் கோபம்

இந்திய ரசிகர்கள் கோபமடைந்தாலும், ஐசிசி எடுத்த முடிவை மாற்ற முடியாது. தோனி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ராணுவ முத்திரை அணிந்த கிளவுஸ் அணிய முடியாது.

Story first published: Friday, June 7, 2019, 22:37 [IST]
Other articles published on Jun 7, 2019
English summary
Cricket World cup 2019 : ICC denies permission to Dhoni’s Balidan badge gloves
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X