ஆப்கனிடம் இந்தியா தோற்கும் என சிலர் காத்துக் கொண்டு இருந்தார்கள்.. பகீர் கிளப்பும் ஷோயப் அக்தர்!

லண்டன் : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் படு மோசமாக இருந்தது. இந்தியா அந்தப் போட்டியில் தோல்வி அடையக் கூட வாய்ப்பு இருந்தது.

Shoaib Akhtar blames junk food habit for the lung problems

எனினும், இந்திய அணி போராடி வெற்றி பெற்றது. இந்த நிலையில், அந்தப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தால் இந்திய அணியை தவறாக சித்தரித்து செய்தி வெளியிட சிலர் காத்துக் கொண்டு இருந்தார்கள் என பகீர் தகவல் ஒன்றை கூறி இருக்கிறார் ஷோயப் அக்தர்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

ஆப்கானிஸ்தான் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. விராட் கோலி 67 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். ஜாதவ் அரைசதம் அடித்தாலும், அவர் பொறுமையாக ரன் சேர்த்தது விமர்சனத்துக்கு உள்ளானது. மற்ற வீரர்கள் சொற்ப ரன்களே எடுத்தனர்.

கடைசி ஓவரில் வெற்றி

கடைசி ஓவரில் வெற்றி

இந்தியா வெறும் 224 ரன்கள் எடுத்து விட்டு, கடைசி வரை போராடி, கடைசி ஓவரில் ஷமியின் ஹாட்ரிக் விக்கெட்டுடன் வெற்றி பெற்றது. போட்டியில் வெற்றி பெற்றாலும், இந்தியா வலுவான அணி என்ற பிம்பம் உடைந்து சுக்கு நூறாகியது.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

போட்டி நடந்து கொண்டு இருந்த போதே இந்திய அணியின் பேட்டிங் குறித்து கடும் விமர்சனம் எழுந்தது. எனினும், வெற்றி பெற்ற பின் விமர்சனங்கள் கொஞ்சம் அடங்கியது. இந்த நிலையில், அந்தப் போட்டியில் தோல்வி அடைந்து இருந்தால் என்ன ஆகி இருக்கும் என கூறினார் ஷோயப் அக்தர்.

பகீர் கிளப்பும் அக்தர்

பகீர் கிளப்பும் அக்தர்

இந்தியா தோற்று இருந்தால், நிறைய ஊகங்களும், பொய்யான செய்திகளும் கிளம்பத் துவங்கி இருக்கும். அதை நீங்களும், நானும் கூட விரும்பி இருக்க மாட்டோம். இந்திய அணியின் செயல்பாடு மீது ஏராளமான கேள்விக் குறிகள் கிளம்பி இருக்கும். காரணம், சிலர் அது போன்ற தலைப்புகளுடன் ஏராளமான செய்திகளை வெளியிட காத்துக் கொண்டு இருந்தார்கள். அந்த விவகாரங்களுக்குள் நான் போக விரும்பவில்லை. ஆனால், நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்கு புரியும் என்றார் அக்தர்.

யாரை சொல்கிறார்?

யாரை சொல்கிறார்?

ஷோயப் அக்தர் யாரை சொல்கிறார் என்பது தான் புரியவில்லை, இந்திய ஊடகங்களை பற்றி கூறுகிறாரா? அல்லது பாகிஸ்தான் ஊடகங்களை கூறுகிறாரா? அல்லது உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வரும் இங்கிலாந்து அல்லது இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சி மீது பொறாமையில் இருக்கும் ஆஸ்திரேலியா பற்றி கூறுகிறாரா? என்பது தெரியவில்லை. அல்லது வேறு ஏதேனும் திரைமறைவு கும்பலை பற்றி குறிப்பிடுகிறாரா?

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Cricket World cup 2019 : Shoaib Akhtar says people waiting for India to lose.
Story first published: Monday, June 24, 2019, 19:48 [IST]
Other articles published on Jun 24, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X