For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நான்கு ஆண்டுகளில் பெங்களூரு அணியிடம் சிஎஸ்கே தோல்வியடைந்ததில்லை... நாளையும் தொடருமா?

சிஎஸ்கே, பெங்களூரு அணிகள் நாளை மோதுகின்றன. 2-014ல் இருந்து பெங்களூரு அணியிடம் சிஎஸ்கே தோல்வியடைந்ததில்லை. அது நாளையும் தொடருமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Recommended Video

IPL 2018, நான்கு ஆண்டுகளில் பெங்களூரு அணியிடம் சிஎஸ்கே தோல்வியடைந்ததில்லை.

பெங்களூரு: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில், கடந்த, நான்கு ஆண்டுகளில் பெங்களூரு அணியிடம் சிஎஸ்கே தோல்வியடைந்தது இல்லை. பெங்களூருவில் நாளை நடக்கும் போட்டியிலும் இது தொடருமா என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதுவரை 22 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், பஞ்சாப் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சிஎஸ்கே இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்று 23வது ஆட்டத்தில் மும்பை, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

CSK has not lost any match aginst RCB in last four years

இந்த சீசனின் 24வது ஆட்டம் பெங்களூருவில் நாளை நடக்கிறது. அதில் சிஎஸ்கே மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. சிஎஸ்கே 5 ஆட்டங்களில் 4 வெற்றி, ஒரு தோல்வியை பெற்றுள்ளது. பெங்களூரு அணி 5 ஆட்டங்களில் 2ல் வெற்றி, 3ல் தோல்வி அடைந்துள்ளது.

2008ல் இருந்து, 2015 வரையிலான 8 சீசன்களில் சிஎஸ்கே, பெங்களூரு அணிகள் 19 முறை மோதியுள்ளன. அதில் 12 முறை சிஎஸ்கே வென்றுள்ளது. பெங்களூரு 6 முறை வென்றுள்ளது. ஒரு ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.

கடந்த இரண்டு சீசன்களில் சிஎஸ்கே விளையாடவில்லை. கடைசியாக 2014ல் நடந்த சீசனில் முதல் ஆட்டத்தில் பெங்களூரு 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதன்பிறகு நடந்த நான்கு ஆட்டங்களிலும் சிஎஸ்கே அணியே வென்றுள்ளது. நாளை நடக்கும் போட்டியிலும் சிஎஸ்கேவின் இந்த வெற்றிப் பயணம் தொடரும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

Story first published: Tuesday, April 24, 2018, 19:06 [IST]
Other articles published on Apr 24, 2018
English summary
CSK has not lost any match against RCB since 2014. Will it continue tomorrow also.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X