For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எங்க தல நிதானமாதான் ஆரம்பிப்பார்.. முடிக்கும் போது சிறப்பா முடிப்பார்! குஷியில் தோனி ரசிகர்கள்!!

Recommended Video

IPL 2019: Chennai vs Punjab | 22 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது சென்னை

சென்னை : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அருமையான வெற்றியைப் பெற்றது. இந்தப் போட்டியில் தோனியின் கேப்டன்சி வழக்கம் போல சிறப்பாக இருந்தது.

அவரது அணித்தேர்வில் இருந்து, ஒவ்வொரு முடிவும் பேசப்பட்டு வருகிறது. அதே சமயம், தோனியின் பேட்டிங் இந்தப் போட்டியில் சிறப்பாக இருந்தது. அதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

விதவிதமான ஸ்டைலில் பந்துவீசிய அஸ்வின்... என்னமா வித்தை காட்டினாரு... எல்லாம் பெயிலியரா போச்சு..! விதவிதமான ஸ்டைலில் பந்துவீசிய அஸ்வின்... என்னமா வித்தை காட்டினாரு... எல்லாம் பெயிலியரா போச்சு..!

100க்கு 3 விக்கெட்கள்

100க்கு 3 விக்கெட்கள்

இந்தப் போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. 14 ஓவர்களில் சென்னை அணி 100 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்து இருந்தது. அப்போதுதான் தோனி தன் பேட்டிங்கை துவக்கினார். விக்கெட் விழுந்தாலும் சிக்கலாகி விடும் என்ற நிலையில் வழக்கம் போல நிதானமாக ரன் சேர்க்கத் துவங்கினார்.

கட்டை போடுகிறார்

கட்டை போடுகிறார்

இதனால், பலரும் தோனி வழக்கம் போல கட்டை போட ஆரம்பித்து விட்டார் எனக் கூறினர். 15 பந்துகளுக்கு 14 ரன்கள் மட்டுமே எடுத்த தோனி, கடைசி இரண்டு ஓவர்கள் வந்த போது அப்படியே அதிரடிக்கு மாறினார்.

வெளுத்த தோனி

வெளுத்த தோனி

19வது ஓவரில் சாம் கர்ரன் பந்துவீச்சை வெளுத்தார் தோனி. ஒரு சிக்ஸ், இரண்டு ஃபோர் அடித்தார். அந்த ஓவரில் 19 ரன்கள் கிடைத்தது. கடைசி ஓவரிலும் தோனி ஒரு ஃபோர் அடித்தார். இறுதியில் சென்னை அணி 160 ரன்கள் எடுத்தது.

அதிக ஸ்ட்ரைக் ரேட்

அதிக ஸ்ட்ரைக் ரேட்

தோனி ஆட்டமிழக்காமல் 23 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற சென்னை பேட்ஸ்மேன்களை விட அதிக ஸ்ட்ரைக் ரேட் (161) வைத்திருந்தார் என்பது தான் இதில் ஆச்சரியம். தோனி முதலில் நிதானம் காட்டினாலும், கடைசியில் போட்டியின் போக்கையே மாற்றி விடுவார் என மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார் என அவரது ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள்.

Story first published: Saturday, April 6, 2019, 23:44 [IST]
Other articles published on Apr 6, 2019
English summary
CSK vs KXIP : Dhoni started scoring runs slowly but end with good strike rate
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X