For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது செம பிட்ச்ன்னு சொன்னாரு.. நம்பி ஏமாந்த ரிக்கி பாண்டிங்.. ரொம்ப லேட்டாக சுதாரிக்கும் டெல்லி!!

டெல்லி : டெல்லி கேபிடல்ஸ் அணி தன் முந்தைய பெயரான டெல்லி டேர்டெவில்ஸ் என்பதை மாற்றியவுடன் "தோல்வி அணி" என்ற பெயரும் மாறி, வெற்றிப் பாதையில் பயணிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

1
45772

ஆனால், 2019 தொடரில் அடிப்படை விஷயங்களில் கூட சொதப்பி, தோல்விகளை சந்தித்து வருகிறது டெல்லி. அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டியில் தோற்ற பின் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கொடுத்த பேட்டி அமைந்தது.

VIDEO: போட்டியில் முறைத்த தோனி... சாரி தல...! கையெடுத்து கும்பிட்ட அந்த வீரர் VIDEO: போட்டியில் முறைத்த தோனி... சாரி தல...! கையெடுத்து கும்பிட்ட அந்த வீரர்

டெல்லி திணறல்

டெல்லி திணறல்

ஹைதராபாத் அணிக்கு எதிராக 129 ரன்கள் மட்டுமே எடுத்தது டெல்லி. பேட்டிங்கில் ரன் குவிக்க ஒவ்வொரு டெல்லி பேட்ஸ்மேனும் திணறினர். இதற்கு முக்கிய காரணம் பிட்ச் தான். டெல்லி பிட்ச் சுழல் மற்றும் மித வேகப் பந்துவீச்சுக்கு பெரிதும் ஒத்துழைத்தது.

சிறந்த பிட்ச் என்றார்!

சிறந்த பிட்ச் என்றார்!

இது குறித்துப் பேசிய ரிக்கி பாண்டிங், "பிட்ச் பராமரிப்பாளரிடம் பேசிய போது இது தான் சிறந்த பிட்ச் என்றார். ஆனால், இது தான் நாங்கள் ஆடியதிலேயே மோசமான பிட்ச். இந்த பிட்ச்சில் எத்தனை குறைவாக பந்து பவுன்ஸ் ஆனது என்று நீங்களே பார்த்தீர்கள்" என கடுப்பாக பேசினார் பாண்டிங்.

கற்றுக் கொள்ள வேண்டும்

கற்றுக் கொள்ள வேண்டும்

இது தான் எங்கள் சொந்த மைதானம். இங்கே நாங்கள் இங்கே எதிரணியை விட சிறப்பாக ஆடுவது எப்படி என்பதை கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் ரிக்கி பாண்டிங் கூறினார். இந்த பிட்ச் இப்படி இருக்கும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. பிட்ச் பராமரிப்பாளர் சொன்னது போல இந்த பிட்ச் இல்லை எனவும் புலம்பித் தள்ளினார் பாண்டிங்.

தோனியின் திட்டம்

தோனியின் திட்டம்

டெல்லி அணியின் பிரச்சனையே இது தான். கடந்த சீசன்களிலும், இந்த சீசனிலும் டெல்லி அணி அடிப்படை விஷயங்களை எளிதாக கோட்டை விட்டு விடுகிறது. டெல்லியில் சென்னை அணி ஆட வந்த போது தோனி மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினார்.

மூன்று போட்டிகள் தேவை?

மூன்று போட்டிகள் தேவை?

அப்போது இருந்ததை விட டெல்லி மைதான பிட்ச் ஹைதராபாத் போட்டியில் மிக மோசமாக இருந்தது. ஆனால், டெல்லி மைதான பிட்ச் சுழற் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கிறது என்பதை புரிந்து கொள்ளவே அந்த அணிக்கு மூன்று போட்டிகள் தேவைப்பட்டுள்ளது.

மூன்று போட்டிகள் தேவை?

மூன்று போட்டிகள் தேவை?

அப்போது இருந்ததை விட டெல்லி மைதான பிட்ச் ஹைதராபாத் போட்டியில் மிக மோசமாக இருந்தது. ஆனால், டெல்லி மைதான பிட்ச் சுழற் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கிறது என்பதை புரிந்து கொள்ளவே அந்த அணிக்கு மூன்று போட்டிகள் தேவைப்பட்டுள்ளது.

முன்னாள் கேப்டன்கள்

முன்னாள் கேப்டன்கள்

ரிக்கி பாண்டிங் என்ற மிகச் சிறந்த முன்னாள் கேப்டன் பயிற்சியாளர். கங்குலி என்ற திறன் வாய்ந்த, அதிரடிகளுக்கு பெயர் போன முன்னாள் கேப்டன் ஆலோசகர். இவர்களை வைத்துக் கொண்டும் டெல்லி அணி தடுமாறி வருவது தான் ஆச்சரியமான விஷயம்.

ஏமாறுவார்களா?

ஏமாறுவார்களா?

பிட்ச் எப்படி இருக்கிறது? எந்த வகை பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும்? என்பதை அனுபவம் வாய்ந்த கங்குலி - ரிக்கி பாண்டிங்கால் பார்த்தவுடன் கணிக்க முடியாதா? மற்றவர்கள் சொல்வதை கேட்டு ஏமாந்து விடுவார்களா? என்பதே சாதாரண ரசிகர்களின் சந்தேகம்.

Story first published: Friday, April 5, 2019, 12:46 [IST]
Other articles published on Apr 5, 2019
English summary
DC vs SRH IPL 2019 : Ricky Ponting says Delhi Pitch is worse and suits for SRH
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X