For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே ஓவர்.. பிராவோ கதை முடிஞ்சது!? தப்பு தப்பு அப்படிலாம் நினைக்கப்படாது என நிரூபித்த பிராவோ!!

Recommended Video

IPL 2019: Chennai vs Delhi | பிராவோ கதை முடிஞ்சது!? விமர்சித்த நெட்டிசன்கள்

டெல்லி : சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐந்தாவது ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் பிராவோ துவக்கத்தில் பந்துவீச்சில் சொதப்பினார்.

எனினும், பின்னர் சுதாரித்த அவர் அசத்தலாக பந்துவீசி ரன்களைக் கட்டுப்படுத்தி, விக்கெட்களை வீழ்த்தினார்.

ஒரு நொடி எல்லோரையும் மிரள வைத்த ஹர்பஜன் சிங்.. நல்ல வேளை மோசமா எதுவும் நடக்கலை!! ஒரு நொடி எல்லோரையும் மிரள வைத்த ஹர்பஜன் சிங்.. நல்ல வேளை மோசமா எதுவும் நடக்கலை!!

தோனி திட்டம்

தோனி திட்டம்

தோனி முதல் எட்டு ஓவர்களுக்குள் தீபக் சாஹருக்கு 4 ஓவர்கள் பந்து வீச வாய்ப்பளித்து அவரது ஓவரை முடித்தார். அதே போல, கடைசி எட்டு ஓவர்களில் பிராவோவின் 4 ஓவர்களை பயன்படுத்தத் திட்டமிட்டு இருந்தார் தோனி.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

அதன்படி 14வது ஓவரை வீசினார் பிராவோ. அந்த ஓவரில் ரிஷப் பண்ட் 1 ஃபோர், தவான் 2 ஃபோர் அடிக்க 17 ரன்கள் கிடைத்தது. இதைக் கண்ட சென்னை அணி ரசிகர்கள், அதிர்ச்சி அடைந்தனர்.

கதை முடிந்தது

கதை முடிந்தது

பிராவோ முன்பு போல பந்து வீசவில்லை. கடைசி நேரத்தில் மிதவேகத்தில் பந்துவீசி ரன்களைக் கட்டுப்படுத்தும் பிராவோ இவர் இல்லை. பிராவோ கதை முடிந்தது என வருத்தத்தில் ஆழ்ந்தனர்.

அடுத்த 3 ஓவர்களில்..

அடுத்த 3 ஓவர்களில்..

ஆனால், அடுத்த மூன்று ஓவர்களில் கலக்கினார் பிராவோ. 16வது ஓவரில் அதிரடி வீரர்கள் ரிஷப் பண்ட், கோலின் இங்கிராம் விக்கெட்களை எடுத்து, 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 18வது ஓவரில் தவான் விக்கெட்டை எடுத்து, 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்

மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்

கடைசி ஓவரான 20வது ஓவரில் 9 ரன்கள் கொடுத்து, தன் 4 ஓவர்களில் 33 ரன்களுக்கு 3 விக்கெட்கள் எடுத்திருந்தார் பிராவோ. முதல் ஓவரில் 17 ரன்கள் கொடுத்தவர், அடுத்த 3 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்கள் சாய்த்து, தப்புக்கணக்கு போட்ட ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

Story first published: Tuesday, March 26, 2019, 23:31 [IST]
Other articles published on Mar 26, 2019
English summary
DCvCSK IPL 2019 : Dwayne Bravo gave 17 runs in first over but ended with 33-3
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X