ஹைதராபாத்-மும்பை இன்று பலப்பரிட்சை.. வெற்றி யாருக்கு?

Posted By:
மும்பைக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் முதலில் பந்து வீச்சு

ஹைதராபாத்: ஐபிஎல் சீசன் 11ல் ஹைதராபாத்தில் நடக்கும் ஏழாவது ஆட்டத்தில், சொந்த மண்ணில் முதல் போட்டியில் வென்ற ஹைதராபாத் அணியை, தன்னுடைய சொந்த மண்ணில் முதல் போட்டியில் தோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ் சந்திக்கிறது.

ஐபிஎல் சீசன் 11 போட்டிகள் துவங்கியுள்ளன. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த சீசனில் இதுவரை 6 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலுமே வென்று, 4 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Defending champion Mumbai Indians looking for first win in IPL

சன் ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இதுவரை தான் விளையாடிய முதல் போட்டியில் வென்று, 2 புள்ளிகளுடன் உள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள், விளையாடிய 2 போட்டிகளில் ஒன்றில் வென்று, 2 புள்ளிகளைப் பெற்றுள்ளன.

ஹைதராபாத்தில் இன்று இரவு நடக்கும் சீசனின் ஏழாவது ஆட்டத்தில், ஹைதராபாத் அணியுடன் மும்பை அணி மோதுகிறது. முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய தெம்புடன் ஹைதராபாத் உள்ளது. சொந்த மண்ணில், சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிராவோ மற்றும் கேதார் ஜாதவின் கடைசி ஓவர் அதிரடி ஆட்டத்தில் மும்பை தோல்வியடைந்தது.

முதல் ஆட்டத்தில், ஹைதராபாத் அணி, பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என மூன்றிலும் அபாரமாக செயல்பட்டது. பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு 20 ஓவர்களில் 9 விக்கெட்களை வீழ்த்தி, 125 ரன்களுக்கு ராஜஸ்தானை கட்டுப்படுத்தியது. அந்தப் போட்டியில் குறைந்தபட்சம், 15 ரன்களை பீல்டர்கள் தடுத்தனர்.

பேட்டிங்கிலும் ஷிகர் தவன் ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்தார். 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதில் இருந்து பேட்டிங்கிலும் ஹைதராபாத் நிரூபித்தது. அதே நேரத்தில் மும்பை இந்தியன் அணி, சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் போராடியது. துவக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா, எவின் லூயிஸ் ரன்

குவிக்க திணறினர். ஆனால், அதற்கடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் ரன்களை குவித்து காப்பாற்றினர். சிஎஸ்கே ஒரு கட்டத்தில் 8 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் என்று திணறியது. அதுவரை பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினர். அறிமுக வீரர் மயாங்க் மார்கண்டே 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஆனால் பிராவோ 30 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தபோது, கடைசி நேரத்தில் சிறப்பாக பந்து வீசக்கூடியவர்களான முஸ்தாபிசுர் ரஹ்மான், ஜஸ்பிரீத் பும்ராவின் முயற்சிகள் எடுபடவில்லை.

சொந்த மண்ணில் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் ஹைதராபாத் அணியும், முதல் வெற்றியைப் பெற வேண்டிய நிலையில் நடப்பு சாம்பியன் மும்பையும் இருப்பதால், ஹைதராபாத்தில் நடக்கும் போட்டி மிகவும் பரபரப்பாகவே இருக்கும். இதுவரை நேரடியாக மோதியுள்ள ஆட்டங்களில், இரு அணிகளுமே, தலா 5 போட்டிகளில் வென்றுள்ளன. அதே நேரத்தில் ஹைதராபாத்தில் 3-2 என்ற கணக்கில் ஹைதராபாத் அணி முன்னிலையில் உள்ளது.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
SRH and MI to meet in the ipl 2018 season's seventh match. Defending champion Mumbai Indians looking for first win in this season.
Story first published: Thursday, April 12, 2018, 19:24 [IST]
Other articles published on Apr 12, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற