For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டிவில்லியர்ஸ் அதிரடி ஆட்டம்... டெல்லியை வென்றது பெங்களூரு

ஐபிஎல் போட்டியில் தோல்விகளால் துவண்டுள்ள டெல்லி மற்றும் பெங்களுரு அணிகள் மோதுகின்றன.

Recommended Video

டி வில்லியர்ஸின் அதிரடியால் டெல்லியை வென்ற பெங்களூர்

பெங்களூரு: மற்றொரு வெற்றி கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் களமிறங்கிய பெங்களூரு அணி டிவில்லியர்ஸ் அதிரடி அரை சதத்தால், 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வென்றது.

ஐபிஎல் டி-20 போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. பெங்களூருவில் நடக்கும் சீசனின் 19வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின.

இதுவரை ஐபிஎல் பட்டம் வெல்லாத இவ்விரு அணிகளும், இந்த சீசனில் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி, மூன்றில் தோல்வியுடன் தலா 2 புள்ளிகளுடன் உள்ளன. மிகச் சிறந்த கேப்டன்கள், தலைச் சிறந்த வீரர்கள் இருந்தபோதும், இரு அணிகளும், மிகவும் சொதப்பலாகவே விளையாடி வருகின்றன.

கோஹ்லிக்கா இந்த நிலைமை

கோஹ்லிக்கா இந்த நிலைமை

இந்திய அணியின் கேப்டனாக பல சாதனைகளைப் புரிந்துள்ள விராட் கோஹ்லி கேப்டனாக உள்ள பெங்களூரு அணி, முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோல்வி அடைந்தது. பஞ்சாப் அணியை வென்ற பெங்களூரு அணி, அதற்கடுத்த ஆட்டங்களில் ராஜஸ்தான் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளிடம் தோல்வி அடைந்தது. தொடர்ந்து மூன்றாவது தோல்வியை தவிர்ப்பதுடன், மற்றொரு வெற்றிக்காகவும் பெங்களூரு தவித்தது.

2 முறை கோப்பை வென்றவர்

2 முறை கோப்பை வென்றவர்

ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக இருந்து இரண்டு முறை கோப்பையை வென்று தந்த கவுதம் கம்பீர் டெல்லியின் கேப்டனாக உள்ளார். பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளிடம் தோல்வியடைந்த டெல்லி அணி, மும்பையை வென்றது. கொல்கத்தாவிடம் தோல்வியடைந்துள்ளது. இரண்டாவது வெற்றி கிடைக்குமா என்ற தவிப்பில் டெல்லி உள்ளது.

10 ஆட்டங்களே பாக்கி

10 ஆட்டங்களே பாக்கி

இரு அணிகளும் ஏற்கனவே 4 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. மேலும் 10 ஆட்டங்கள் மட்டுமே பாக்கி உள்ளன. அதனால், புள்ளிப் பட்டியலில் முன்னேற, மற்றொரு வெற்றி இரு அணிகளுக்கும் உடனடியாக தேவை. இந்த நிலையில், பெங்களூருவில் நடக்கும் ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரிஷப் பந்த் அதிகபட்சமாக 85 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்களும் அடித்தனர்.

சுலபமாக வென்றது பெங்களூரு

சுலபமாக வென்றது பெங்களூரு

175 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு, 18 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து வென்றது. டிவில்லியர்ஸ் 39 பந்துகளில் 10 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 90 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். கேப்டன் விராட் கோஹ்லி 30 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்த சீசனில் இரண்டாவது வெற்றியை பெங்களூரு பெற்றது.

Story first published: Saturday, April 21, 2018, 23:37 [IST]
Other articles published on Apr 21, 2018
English summary
RCB and DD clash for their prestige in the ipl match today. They are looking for another win in this series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X