For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடேயப்பா...! தல தோனி ஐபிஎல்லில் இப்படி ஒரு சாதனையை படைச்சிருக்காரா?... சூப்பர்

Recommended Video

IPL 2019 Chennai vs Bengaluru | தோனி ஐபிஎல்லில் இப்படி ஒரு சாதனையை படைச்சிருக்காரா?- வீடியோ

சென்னை:ஐபிஎல் தொடரில் 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் மகேந்திர சிங் தோனி. பெங்களூரு அணிக்கு எதிராக 7 சிக்சர்கள் அடித்ததன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.

சென்னை அணியின் கேப்டனாக வலம் வரும் தோனி. இதுவரை 3 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார். தற்போது ஐபிஎல் தொடரில் 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். ஒட்டுமொத்தமாக இந்த சாதனையை 2வது வீரர் ஆவார்.

தோனிக்கு முன்பாக 300 சிக்சர்களுடன் அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் முதல் இடத்தில் நீடிக்கிறார். 184 போட்டிகளில் ஆடியுள்ள தோனி 203 சிக்சர்கள் அடித்துள்ளார்.

செமையா பயம் காட்டிட்டாரு.. எப்படியோ ஜெயிச்ச வரைக்கும் சந்தோஷம்.. தோனி பற்றி சொன்ன கோலி!! செமையா பயம் காட்டிட்டாரு.. எப்படியோ ஜெயிச்ச வரைக்கும் சந்தோஷம்.. தோனி பற்றி சொன்ன கோலி!!

சாதனை பட்டியல்

சாதனை பட்டியல்

ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக சிக்சர்கள் அடித்த டாப் 5 இந்திய வீரர்களின் பட்டியல் இதோ: ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போன்ற அணிகளுக்கு ஆடியுள்ள யூசுப் பதான் 172 போட்டிகளில் 158 சிக்சர்கள் அடித்து இந்த பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 2018ம் ஆண்டிலிருந்து ஆடி வருகிறார்.

கோலியின் 186 சிக்ஸர்கள்

கோலியின் 186 சிக்ஸர்கள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து வரும் விராட் கோலி இதுவரை 173 ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ளார். கேப்டன் பொறுப்பில் பெங்களூர் அணிக்காக 5000 ரன்களுக்கு மேல் குவித்து உள்ளார். விராட் கோலி ஐபிஎல் தொடரில் 186 சிக்சர்களுடன் பட்டியலில் 4வது இடத்தில் நீடிக்கிறார்.

3வது இடத்தில் ரெய்னா

3வது இடத்தில் ரெய்னா

சென்னை அணிக்காக தொடர்ந்து பல ஆண்டுகளாக சிறப்பாக ஆடிவருபவர் சின்ன தல சுரேஷ் ரெய்னா. ஐபிஎல் தொடரில் 5000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். இதுவரை 185 போட்டிகளில் 190 சிக்ஸர்கள் அடித்து இந்த பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார்

190 சிக்சர்கள்

190 சிக்சர்கள்

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வரும் ரோகித் சர்மா, மும்பை அணிக்காக 3 முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இதுவரை 182 ஐபிஎல் போட்டிகளில் 190 சிக்சர்கள் அடித்து இந்த பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளார்.

Story first published: Monday, April 22, 2019, 11:34 [IST]
Other articles published on Apr 22, 2019
English summary
Dhoni 1st Indian to hit 200 sixes in indian premier league.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X